எச்சரிக்கை: இந்த WhatsApp செய்தி வந்தால் ஓப்பன் செய்ய வேண்டாம், செய்தால் கணக்கு காலி

Cyber Fraud: ‘எச்சரிக்கையாக இருங்கள்! எம்டின்எல்- இன் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி சைபர் மோசடி செய்யப்படுகிறது. மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.’-காவல்துறை

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2022, 02:31 PM IST
  • ஆன்லைன் மோசடி வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
  • வங்கி மோசடி மற்றும் கெஒய்சி புதுப்பித்தல் ஆகியவற்றின் பெயரில் பல மோசடி வழக்குகள் பற்றி நாளுக்கு நாள் தெரியவருகிறது.
  • எம்டின்எல் -இன் பெயர் மற்றும் லோகோவை தவறாகப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
எச்சரிக்கை: இந்த WhatsApp செய்தி வந்தால் ஓப்பன் செய்ய வேண்டாம், செய்தால் கணக்கு காலி title=

ஆன்லைன் மோசடி வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. வங்கி மோசடி மற்றும் கெஒய்சி புதுப்பித்தல் ஆகியவற்றின் பெயரில் பல மோசடி வழக்குகள் பற்றி நாளுக்கு நாள் தெரியவருகிறது. எம்டின்எல் -இன் பெயர் மற்றும் லோகோவை தவறாகப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. வாட்ஸ்அப்பில் கெஒய்சி புதுப்பிப்புகள் பற்றி வரும் செய்திகளுக்கு இரையாக வேண்டாம் என்று மொபைல் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளதாக டெல்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது அனைத்து மாநில மொபைல் பயனர்களுக்கும் பொருந்தும். இந்த புதிய மோசடி பற்றி தெரிந்து கொள்வோம்.

போலீசார் முழு விஷயத்தையும் தெரிவித்தனர்

எம்டின்எல் வாட்ஸ்அப்பில் கெஒய்சி சரிபார்ப்பைச் செய்யாது என்றும், இதுபோன்ற மோசடி செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த காவல்துறை, “‘அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் எம்டிஎன்எல் சிம் கார்டு, ஆதார், இ-கேஒய்சி ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் உங்கள் சிம் கார்டு பிளாக் செய்யப்பட்டுவிடும், உடனடியாக அழைக்கவும்.’: இது போன்ற செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருங்கள்." என்று எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க | WhatsApp Blocked: வாட்ஸ் அப் பிளாக்கை கண்டுபிடிக்க எளிதான வழி

‘இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்’: எச்சரிக்கும் காவல்துறை

இது குறித்து எச்சரிக்கை விடுத்த டெல்லி காவல்துறை, 'எச்சரிக்கையாக இருங்கள்! எம்டின்எல்- இன் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி சைபர் மோசடி செய்யப்படுகிறது. மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் கெஒய்சி- ஐ அப்டேட் செய்யுமாறு செய்திகளை அனுப்புகிறார்கள். அவர்கள் இந்த சாக்கில் ரகசிய தகவல்களைப் பெறுகிறார்கள்.’ என்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற செய்திகளைப் பெற்றால், தங்கள் சொந்த தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும், சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் டெல்லி காவல்துறை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும்

சந்தேகத்திற்கிடமான எந்த செயலியையும் யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற சைபர் கிரைம் ஏதேனும் நடந்தால், பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணிலோ அல்லது அருகில் உள்ள சைபர் காவல் நிலையத்திலோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். 

தொழில்நுட்பத்தால் எத்தனை நன்மை இருக்கிறதோ அதே அளவு தீமைகளும் இருக்கின்றன. ஆகையால் இதன் பயன்பாட்டில் மிக கவனமாக இருப்பது மிக அவசியமாகும். அதுவும், வங்கி பரிவர்த்தனைகளிலும், அது தொடர்பான செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நாம் கஷ்டப்பட்டு, உழைத்து ஈன்ற பணத்தை இழக்க நேரிடலாம்.

மேலும் படிக்க |  ஒரே போனில் 2-2 WhatsApp மற்றும் Instagram பயன்படுத்த டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News