டாப் 5 மலிவு விலை மின்சார கார்கள்: நாட்டில் மின்சார கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ஏராளமான மக்கள் மின்சார கார்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் அவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. நிறுவனங்களும் சந்தையில் புதிய மாடல்களைக் கொண்டு வருகின்றன. மின்சார கார்கள் சாதாரண கார்களை விட விலை அதிகம் என்றாலும், அவற்றின் நன்மைகள் காரணமாக மக்கள் அவற்றை வாங்க விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் எலக்ட்ரிக் கார் வாங்க விரும்பி, உங்கள் பட்ஜெட் சற்று குறைவாக இருந்தால், சந்தையில் கிடைக்கும் சில மலிவு விலை மின்சார கார்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
டாடா டியாகோ EV
பட்டியலில் உள்ள முதல் மின்சார் கார் டாடாவின் Tiago EV ஆகும். Tiago EV இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.69 முதல் ரூ.11.99 லட்சம் வரை இருக்கும். Tiago EV நான்கு வகைகளில் கிடைக்கிறது.இதில் XE, XT, XZ+ மற்றும் XZ+ Tech LUX ஆகியவை அடங்கும். மறுபுறம், பேட்டரி பேக் பற்றி பேசுகையில், 19.2kWh மற்றும் 24kWh ஆகிய இரண்டு விருப்பங்கள் இதில் கிடைக்கின்றன. இதில் MIDC வரம்பு முறையே 250 கிமீ மற்றும் 315 கிமீ வரை உள்ளது. டியாகோவில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் 74bhp மற்றும் 114Nm அவுட்புட்டை உருவாக்கும் திறன் கொண்டது.
எம்ஜி காமெட்
பட்டியலில் இரண்டாவது கார் எம்ஜி காமெட் ஆகும். இதில், நீங்கள் 17.3kWh பேட்டரி பேக்கைப் பெறுவீர்கள். இந்த வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 230 கிமீ வரை பயணிக்க முடியும் என நிறுவனம் கூறுகிறது. காமெட்டில் பொருத்தப்பட்டுள்ள பின்-சக்கர இயக்கி மின்சார மோட்டார் 42PS ஆற்றலையும் 110Nm முறுக்குவிசையையும் உருவாக்கும் திறன் கொண்டது. காமெட்டின் பேட்டரி சார்ஜ் ஆக 7 மணிநேரம் ஆகும். இந்த கார் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.98 லட்சம் முதல் ரூ.9.98 லட்சம் வரை உள்ளது.
டாடா நெக்ஸான் EV
பட்டியலில் மூன்றாவது கார் டாடாவின் Nexon EV ஆகும். இதன் விலை பற்றி பேசினால், இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.14.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த மின்சார காம்பாக்ட் எஸ்யுவி XM, XZ + மற்றும் XZ + LUX வகைகளில் வருகிறது. இது 30.2kWh லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இது 127bhp ஆற்றலையும் 245Nm முறுக்குவிசையையும் உருவாக்கும் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கார் வாங்கப்போறீங்களா? இந்த பட்டியல பார்த்துட்டு வாங்குங்க!!
சிட்ரோயன் ஈசி3
பட்டியலில் இருக்கும் நான்காவது எலக்ட்ரிக் கார் சிட்ரோயன் ஈசி3 ஆகும். இது 29.2kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது, EC3 இல் நீங்கள் ARAI சான்றளிக்கப்பட்ட 320 கிமீ வரம்பைப் பெறுவீர்கள். EC3 இல் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் 57PS ஆற்றலையும் 143Nm முறுக்குவிசையையும் உருவாக்கும் திறன் கொண்டது. 15A பிளக் பாயிண்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய 10 மணி 30 நிமிடங்கள் ஆகும். அதே நேரத்தில், டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 57 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். விலையைப் பற்றி பேசினால், எக்ஸ்-ஷோரூம் ரூ.11.50 லட்சம் முதல் ரூ.12.76 லட்சம் வரை உள்ளது.
டாடா டிகோர் EV
Tigor EV ஐ ஐந்தாவது விருப்பமாக தேர்ந்தெடுக்கலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.49 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் வரை உள்ளது. Tigor EV ஆனது XE, XT, XZ+ மற்றும் XZ+ Tech LUX வகைகளில் வருகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் 74 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. இந்த காரில் 26 kWh, லித்தியம்-அயன் பேட்டரி பேக் கிடைக்கும்.
மேலும் படிக்க | டாப் கார்களின் ஒப்பீடு இதோ: படிச்சு பார்த்து உங்கள் காரை முடிவு செய்யலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ