Paytm, WhatsApp செயலிகளை தொடர்ந்து மைக்ரோசாப்டின் Kaizala செயலியிலும் பணபறிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!
Paytm, WhatsApp செயலிகளில் பயனர்கள் தங்களது நண்பர்களுக்கு பணம் பரிவர்தனை செய்தல், கட்டணம் செலுத்துதல் போன்ற வசதிகளை அறிமுகம் செய்ததினைப் போல் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தங்களது Kaizala செயலில் இந்த வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன நிர்வாக துணைத் தலைவர் ராஜேஷ் ஜா தெரிவிக்கையில்... தங்கள் வாடிக்கையாளர்கள் தேவையினை கருத்தில் கொண்டு இந்த அம்சத்தினை கொண்டுவந்துள்ளோம். என தெரிவித்துள்ளார்.
Kaizala - மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மெசேஜ் செயலி. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் இந்த Kaizala செயலியானது WhatsApp செயலிக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டது.
Kaizala செயலியில் கொண்டு வரப்பட்டுள்ள சில வசதிகள் WhatsApp-க்கு பெரும் சவாலாக உள்ளது என்றே கூறப்படுகிறது. WhatsApp குரூப்பில் அதிகபட்சமாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் Kaizala செயலியில் எத்தனை பேரை வேண்டுமானாலும் குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும்.
Kaizala செயலியில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்த பேசவும் முடியும். எனினும் WhatsApp ஆதிகத்திற்கு முன்பு இன்னும் Kaizala போராடி வருகின்றது என்பதே உன்மை!