அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. இந்த கஜா புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு GSAT-29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இந்திய செயற்கைக்கோள் நிறுவனம் இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்நிலையில், கஜா புயல் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என்ற தகவலை அடுத்து செயற்கைக்கோள் ஏவப்படும் நேரம் மாற்றப்படும் என வதந்திகள் பரவிவந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இஸ்ரோ.
Update #3#ISROMissions
The countdown has begun today 14:50 (IST) for the launch of #GSLVMkIIID2 carrying #GSAT29 at SDSC SHAR, Sriharikota. Launch scheduled at 17:08 (IST) on Nov 14. More updates to follow. @PMOIndia @pibchennai
Curtain-raiser video on https://t.co/MX54Cx57KU pic.twitter.com/E0atwxj9HP— ISRO (@isro) November 13, 2018
கஜா புயல் காரணமாக எந்த பாதிப்பும் இல்லை. திட்டமிட்டபடி நவம்பர் 14(இன்று) மாலை 5.08 மணிக்கு GSLV MK3 விண்ணில் ஏவப்படும். இதற்கான கவுன்டவுன் நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு தொடங்கியது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். 3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் GSAT-29, MK3 எடுத்துச் செல்கிறது.