ஐபிஎல் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! ஐபிஎல் 2023 தொடங்க உள்ளது. ஐபிஎல்-ன் அதிகாரப்பூர்வ ஓடிடி தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் அனைத்து போட்டிகளையும் நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய தயாராக உள்ளது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இருந்து இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை நெட்வொர்க் வழங்குநர்கள் நீக்கியதால் ஜியோ பயனர்கள் இந்த முறை சற்று ஏமாற்றம் அடைவார்கள். ஆனால் நீங்கள் ஏர்டெல் அல்லது விஐ-யின் போஸ்ட்பெய்டு பயனராக இருந்தால், நீங்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை.
ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா (Vi) பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார்- இன் இலவச சந்தாவைப் பெறலாம். டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியாவின் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
ரூ.499 திட்டம்:
ஏர்டெல்லின் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டமானது 75ஜிபி டேட்டா ரோல்ஓவருடன் வருகிறது. இந்த திட்டத்தில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் இலவச சந்தாக்கள், வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க | Free Internet மற்றும் அன்லிமிடெட் காலிங்..Jio புதிய Offer
ரூ.999 திட்டம்:
இந்த திட்டத்தில், ஏர்டெல் 1 சிம்முடன் 3 இலவச குடும்பச் சேர்க்கையை (ஃபேமிலி ஏட் ஒன்) வழங்குகிறது. இந்த திட்டத்தில் 100ஜிபி டேட்டா ரோல்ஓவர் கிடைக்கிறது. இது தவிர, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் தினமும் கிடைக்கும். இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா ஆகியவை அடங்கும்.
Vi போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
ரூ.501 திட்டம்:
வோடபோன் ஐடியாவின் ரூ.501 திட்டத்தில் 90ஜிபி டேட்டா ரோல்ஓவர் கிடைக்கிறது. இது தவிர, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு மாதத்திற்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலின் இலவச சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமேசான் ப்ரைம், விஐ மோவீஸ் அண்ட் டிவி மற்றும் ஹங்காமா மியூசிக் மற்றும் இன்னும் பலவற்றிற்கான சந்தாவையும் வழங்குகிறது.
ரூ.701 திட்டம்:
அன்லிமிடெட் டேட்டா, அழைப்பு மற்றும் 300எஸ்எம்எஸ் ஆகியவை இந்த திட்டத்தில் கிடைக்கும். இலவச ஓடிடி தொகுப்பில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சூப்பர், அமேசான் பிரைம் மற்றும் இன்னும் பலவற்றிற்கான இலவச சந்தா உள்ளது.
மேலும் படிக்க | Whatsapp பயனர்களுக்கு மாஸ் நியூஸ்: விரைவில் வருகிறது அட்டகாசமான அம்சம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ