டெஹ்ராடூன்: பஜ்ஜி, வடை, போண்டா, சமோசா, உளுந்து வடை, பூரி மற்றும் பக்கோடா போன்ற உணவு பொருட்கள் சமையல் எண்ணெயில் நன்றாக வறுத்த பின்னர், அதை நாம் உண்ணுகிறோம். அப்படி ஒருமுறை சமையல் எண்ணெய்யை (Used Cooking Oil) நாம் பயன்படுத்திய பிறகு, மீண்டும் பயன்படுத்தினால், அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. ஆனால் தெரு ஓவரத்தில் இயக்கும் உணவு கடைகள், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை, மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. அதேசமயத்தில் ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெயை என்னதான் செய்ய? அது வேஸ்ட் தானா? என்ற கேள்வி அனைவரின் மனதில் எழும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டெஹ்ராடூனின் (Dehradun) ஐ.ஐ.பி விஞ்ஞானிகள், பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசலை (Biodiesel) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதன்மூலம் பயன்படுத்திய சமையல் எண்ணெய் குறித்து சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அது எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் திட்டங்களைத் தயாராகி வருகிறது.
நாட்டில் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றாக வாகன பயன்பாட்டுக்கு புதிய தயாரிப்பு மிகவும் அவசியம் என்பது சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். அந்த வரிசையில், டெஹ்ராடூனைச் சேர்ந்த ஐ.ஐ.பி விஞ்ஞானிகள் சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயாரிக்க ஒரு ஆலையை அமைத்துள்ளனர்.
ஐ.ஐ.பி விஞ்ஞானிகள் காரை இயக்குவதற்கு சமையலறையில் பயன்படுத்திய மீதமுள்ள எண்ணெய் மூலம் டீசல் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். ஐ.ஐ.பி விஞ்ஞானிகள் தொடர்ந்து பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசலை உருவாக்குகிறார்கள்.
இதுக்குறித்து ஐ.ஐ.பி இயக்குனர் டாக்டர் அஞ்சன் ரே கூறுகையில், "விஞ்ஞானிகள் சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசலை தயாரிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த பயோடீசலை வாகனங்களில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயாரிக்கப்படும் எனக் கூறினார்.