புதுடெல்லி: கனிணி மற்றும் செயலிகளில் இருந்து உங்கள் பேஸ்புக் சுயவிவரத்தை லாக் செய்ய விரும்பினால், இந்த முறையைப் பின்பற்றவும்
மொபைல் செயலி மற்றும் கணினியில் உங்கள் பேஸ்புக் கணக்கைப் லாக் செய்து வைப்பது அவசியம். இதனால், உங்கள் பேஸ்புக் சுயவிவரம் வேறொருவரின் கைகளில் சிக்காமல் பாதுகாக்கப்படும்.
சமூக ஊடக தளமான பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா (Facebook Meta), தனது பயனர்களின் தரவைப் பாதுகாக்க புதிய அம்சங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் விரும்பினால், உங்கள் மொபைல் மற்றும் கணினியில் பேஸ்புக்கை லாக் (Lock Facebook Profile) செய்து வைக்கலாம்.
உங்கள் சுயவிவரத்தை லாக் செய்து வைப்பதன் மூலம், உங்கள் Facebook நண்பர்கள் பட்டியலில் இல்லாதவர்கள் சுயவிவரத்தின் வரையறுக்கப்பட்ட தகவல்களை மட்டுமே பார்க்க முடியும்ப்பார்கள்.
Also Read | Facebook பயன்படுத்தினா, அடிக்க ஆள் வைத்தவர்! ஒரு மணி நேரத்துக்கு $8 சம்பளம்!
சுயவிவரத்தை லாக் செய்தால் என்ன நடக்கும்?
உங்கள் பேஸ்புக் சுயவிவரத்தை நீங்கள் பூட்டினால், புகைப்படங்கள், இடுகைகள், சுயவிவரப் படங்கள், பதிவுகள் ஆகியவை டைம்லைனில் உள்ள புதிய இடுகைகள் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். உங்கள் இடுகைகள் பொதுவில் மட்டும் இருக்காது மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
மொபைலில் பேஸ்புக்கை எவ்வாறு லாக் செய்வது?
முதலில் போனில் பேஸ்புக்கை திறந்து உங்கள் சுயவிவரத்தை கிளிக் செய்யவும்
இப்போது Add to Story அடுத்து வரும் 3 புள்ளிகளைக் கிளிக் செய்யவும்
உங்கள் சுயவிவரத்தை பூட்டுவதற்கான விருப்பம் இங்கே கிடைக்கும்
இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பது சுருக்கமாகத் தரும்
கீழே, சுயவிவரத்தை பூட்டுவதற்கான விருப்பம் வரும், அதைத் கிளிக் செய்யவும்
இப்போது ஒரு பாப்அப் செய்தி வரும், அதில் நீங்கள் உங்கள் சுயவிவரத்தை பூட்டிவிட்டீர்கள் என்று எழுதப்பட்டிருக்கும்
Also Read | Facebook குற்றச்சாட்டு: கோவிட் குறித்து சீன நெட்வொர்க்குகள் ஆன்லைனில் தவறான பிரச்சாரம்
கணினியிலிருந்து பேஸ்புக்கை எவ்வாறு பூட்டுவது?
முதலில் கணினியில் https://www.facebook.com/ என்பதைத் திறக்கவும்
உங்கள் ஐடி கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்
URL இல் உள்ள உங்கள் சுயவிவர ஐகானைக் கிளிக் செய்து 'www' ஐ 'm' என்று மாற்றவும்
இதற்குப் பிறகு உங்கள் URL 'm.facebook.com/yourprofilename' என்று மாறிவிடும்.
இது டெஸ்க்டாப் உலாவியை பேஸ்புக்கின் மொபைல் பதிப்பிற்கு எடுத்துச் செல்லும்
இப்போது சுயவிவரத்தைத் திருத்து மெனுவுக்கு அருகில் மூன்று புள்ளிகள் மெனு தோன்றும்
லாக் ப்ரோஃபைல் ஆப்ஷன் மூன்று டாட் மெனுவில் தோன்றும், அதை கிளிக் செய்யவும்
ஆண்ட்ராய்டு பதிப்பைப் போலவே, இங்கேயும் இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அடுத்த பக்கம் உங்களுக்குத் தெரிவிக்கும்.
இப்போது கீழே சுயவிவரத்தைப் பூட்டுவதற்கான விருப்பம் இருக்கும், அதைக் கிளிக் செய்வதன் மூலம் சுயவிவரம் லாக் செய்யப்படும்.
ALSO READ | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR