வாட்ஸ்அப் பேமண்ட்டில் கேஷ்பேக் பெறுவது எப்படி?

இந்தியாவில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் பயனர்களுக்கு வாட்ஸ் அப் ரூ.33 வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 2, 2022, 12:13 PM IST
  • வாட்சப் பேமன்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • தற்போது கேஷ்பேக் ஆபரையும் வழங்கி வருகிறது.
  • இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற வாட்சப் திட்டமிட்டுள்ளது.
வாட்ஸ்அப் பேமண்ட்டில் கேஷ்பேக் பெறுவது எப்படி? title=

மெட்டாவுக்கு சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ் அப் ஆனது பயனர்களை ஈர்க்கும் வகையில் பலவித வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  இந்தியாவில் 100 மில்லியன் கணக்கில் வாட்ஸ் அப் பே பயனர்களை கொண்டுவரும் நோக்கில் வாட்ஸ் அப் இப்போது பணம் செலுத்துபவர்களுக்கு கேஷ்பேக் ஆஃபர்களை வழங்க திட்டமிட்டு இருக்கிறது.  இந்நிறுவனம் யூபிஐ மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.33 முதல் கேஷ்பேக்கை வழங்க முடிவெடுத்துள்ளது.  போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற யூபிஐ பேமெண்ட் ஆப்ஸ்களுக்கு  போட்டியாக வாட்ஸ் அப் இதனை செய்துள்ளது. 

மேலும் படிக்க | ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமா? சாம்சங்கின் அசத்தலான புதிய டிவிகள்!

சமீபத்திய அறிக்கையின்படி,  வாட்ஸ் அப் பே மூலம் யூபிஐ பணம் செலுத்தும் பயனர்கள் கேஷ்பேக் சலுகைகள் பெரும் வகையில் கேஷ்பேக் ஆஃபர் திட்டத்தை இந்தியாவில் விரைவில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.  மேலும், வணிகர்களுக்கான கட்டணங்களை செலுத்த பயனர்கள் வாட்ஸ் அப் பேவை பயன்படுத்தினால் அவர்களுக்கும் இந்த கேஷ்பேக் சலுகைகளை வழங்க நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.  அடுத்ததாக வாட்ஸ் அப் அதன் கட்டணச் சேவையைப் பயன்படுத்தி யூபிஐ வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு ரூ.33 வரை கேஷ்பேக் வழங்கப்போகிறது.  மூன்று தடவை பண பரிவர்த்தனைகளுக்கு பிறகு கேஷ்பேக் ரிவார்டுகளைப் பெற பயனர்கள் தகுதி பெறுவார்கள், மேலும் அவர்கள் எவ்வளவு தொகை வேணுமென்றாலும் அனுப்பலாம், இவ்வளவு தொகை அனுப்பினால் தான் கேஷ்பேக் வழங்கப்படும் என்கிற நிபந்தனைகள் எதுவும் கூறப்படவில்லை.  உதாரணமாக வெறும் ரூ.1 அனுப்பி கூட நீங்கள் ரூ.33 சம்பாதிக்கலாம்.

கேஷ்பேக் வழங்கும் திட்டத்தை வாட்ஸ் அப் கடந்த ஆண்டு சோதனை செய்து, அது பயனர்களுக்கு கேஷ்பேக் தொகையாக ரூ.51 வழங்கியது, ஆனால் இது வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைத்தது.  தற்போது அறிமுகப்படுத்தப்படும் கேஷ்பேக் சலுகையானது அனைத்து பயனர்களுக்கும் மே மாத இறுதிக்குள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  இது வணிகர்களுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு கேஷ்பேக் வழங்குவது குறித்து சோதனை செய்து வருவதோடு, ப்ரீபெய்டு கட்டணங்கள் செலுத்துவோருக்கு கேஷ்பேக் வழங்குவதை நிறுவனம் சோதித்து வருகிறது.  மேலும் வாட்ஸ் அப் பே மூலம் டோல்கேட் மற்றும் பிற பில்களை செலுத்தும் பயனர்களுக்கு இதே போன்ற கேஷ்பேக்குகளை வாட்ஸ் அப் வழங்கவுள்ளது.

மேலும் படிக்க | ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல மொபைல்களில் ஓபன் செய்யலாம் - புதிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News