எந்தவொரு வாடிக்கையாளருக்கும் எந்த பரிவர்த்தனையின் போதும் வாட்ஸ்அப்பில் இருந்து எந்த வித செய்தியோ அழைப்போ வராது. Whatsapp பிரதிநிதி என்று தங்களை சொல்லிக்கொண்டு யாராவது அழைத்தால், அவரை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
உலகில் செய்திகளை பரிமாறிக்கொள்ள அதிகம் பயன்படுத்தப்படும் தளம் Whatsapp ஆகும். சமீபத்தில் Whatsapp நுகர்வோருக்கான கட்டண சேவையைத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்துவதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் இணையம் மூலமாக ஏற்படும் மோசடிக்கு பலியாகலாம்.
SBI ஜெனரலுடன் இணைந்து, வாட்ஸ்அப் இந்த ஆண்டு இறுதிக்குள் மலிவான சுகாதார காப்பீட்டை வழங்கத் தொடங்கும். இது தவிர, வாட்ஸ்அப்பின் HDFC ஓய்வூதிய திட்டம் மற்றும் PinBox Solutions ஆகியவற்றுடன் இணைந்து மைக்ரோ பென்ஷன் தயாரிப்புகளை வழங்கும்.
வாட்ஸ்அப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செயலி மூலம் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.