ரூ. 74999 விலை கொண்ட சாம்சங் Galaxy S20 FE 5ஜி போன் வெறும் 9999 ரூபாய்க்கு வாங்கலாம்

Buy Samsung Galaxy S20 FE At 9999: அமேசான் தளத்தில் பெரும் தள்ளுபடிகளுடன் வெறும் 9999. ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி போனை வாங்குங்கள். அனைத்து சலுகை விவரங்களை இங்கே பார்க்கவும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2023, 02:11 PM IST
  • அற்புதமான கேமராக்கள் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டது.
  • Samsung Galaxy S20 FE போனின் ஆரம்ப விலை ரூ. 74999 ஆகும்.
  • ரூ.40000 தள்ளுபடி + எக்ஸ்சேஞ்ச் ஆப்பர் + வங்கி சலுகை மூலம் ரூ. 9999-க்கு வாங்கலாம்.
ரூ. 74999 விலை கொண்ட சாம்சங் Galaxy S20 FE 5ஜி போன் வெறும் 9999 ரூபாய்க்கு வாங்கலாம் title=

Samsung Galaxy 5G Smartphone: சாம்சங் கேலக்ஸி வரிசையில் அதிக விலைக்கொண்ட போன்களில் ஒன்று சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ (Samsung Galaxy S20 FE) ஆகும். இது இன்னும் அற்புதமான கேமராக்கள் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்ட ஒரு பவர்ஹவுஸ் ஸ்மார்ட்போன் ஆகும். பல அம்சங்களை கொண்ட எடை குறைந்த பார்த்ததும் கவரக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ (Samsung Galaxy S20 FE) சிறந்த ஒன்றாக இருக்கும். ஆனால் இந்த போனின் ஆரம்ப விலை ரூ. 74999 ஆக இருந்தது. ஆனால் தற்போது பல தள்ளுபடி மற்றும் சலுகையின் காரணமாக பத்தாயிரம் ரூபாயிக்கும் குறைவாக விலையில் வாங்கிக்கொள்ளலாம். அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு உள்ளது. 

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ போனின் தள்ளுபடி
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி எஸ்20 எஃப்இ போனின் அசல் விலை ரூ. 74999. இருப்பினும், அமேசான் அறிவித்துள்ள அசத்தலான சலுகையின் கீழ் இந்த போனை வெறும் ரூ. 9999 வாங்கலாம்.

அமேசான் முதலில் கேலக்ஸி எஸ்20 எஃப்இ போனின் அசல் விலையில் 53 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. அதாவது உங்களுக்கு ரூ. 40000 வரை தள்ளுபடி கிடைக்கும். அதன்பிறகு, இது வெறும் 34,990 ரூபாய்க்கு வாங்கலாம். அதுமட்டுமில்லாமல் மற்ற சலுகைகளின் உதவியுடன் கேலக்ஸி எஸ்20 எஃப்இ (Galaxy S20 FE) போனின் விலையை மேலும் குறைக்கலாம்.

மேலும் படிக்க: சாட்ஜிபிடி கூட சாட் செய்தால் ரூ.2.50 கோடி சம்பளம்..! டெக் இளைஞர்களே தயாராகுங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ எக்ஸ்சேஞ்ச் சலுகை
அமேசான் கேலக்ஸி எஸ்20 எஃப்இ போனுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்குகிறது. நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் ரூ. 25,000 தள்ளுபடி கிடைக்கும். இங்கு கவனிக்கப்பட வேண்டியது, எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் உங்களுக்கு கிடைக்கும் தொகை என்பது உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மாடல், அதன் நிலை மற்றும் தன்மையைப் பொறுத்தது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ வங்கி சலுகைகள்
கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் கடன் அட்டை மூலம் வாங்கினால் வங்கிகள் ஏராளமான சலுகைகளையும் வழங்குகிறது. இதன்மூலம் மேலும் தள்ளுபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எச்எஸ்பிசி வங்கி கிரெடிட் கார்டு (HSBC Credit Card) மூலம் பரிவர்த்தனை செய்தால் கேஷ்பேக் ரூ. 250 தள்ளுபடி கிடைக்கும். 

இந்த அனைத்து சலுகைகளும் சேர்த்தல் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 9999-க்கு வாங்கலாம்.

இந்த அற்புதமான சலுகையை மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க. அமேசான் தளத்தில் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனுக்கான டீல் முடியும் முன்பே விரைவாகப் பெறுங்கள்!

மேலும் படிக்க: Vivo Y11: ரூ. 10,000-க்குள் இப்படி ஒரு அசத்தல் போனா? விவோ அறிமுகம் செய்த அதிசயம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News