Flipkart-ல் சலுகை மழை: மிகக்குறைந்த விலையில் iphone 13 வாங்க சூப்பர் வாய்ப்பு

ஆப்பிள் ஐபோன் 13, 12 மற்றும் 12 மினியிலும் எக்ஸ்சேஞ்ச் சலுகை, கேஷ்பேக் சலுகை ஆகிய சலுகைகள் கிடைக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2022, 11:14 AM IST
  • பிளிப்கார்ட் ஆப்பிள் சாதனங்களின் சீரிஸில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வழங்குகிறது.
  • உங்களின் தற்போதைய மொபைலின் பரிமாற்ற மதிப்பைச் சரிபார்த்து, புதிய பர்ச்சேஸ்களுக்கு அதை பயன்படுத்திக்கொள்ளவும்.
  • Flipkart ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளிலும் கேஷ்பேக் வழங்குகிறது.
Flipkart-ல் சலுகை மழை: மிகக்குறைந்த விலையில் iphone 13 வாங்க சூப்பர் வாய்ப்பு title=

Flipkart Offers: பிளிப்கார்ட் ஆப்பிள் சாதனங்களின் சீரிஸில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வழங்குகிறது. ஆப்பிள் ஐபோன் 13, 12 மற்றும் 12 மினியிலும் எக்ஸ்சேஞ்ச் சலுகை, கேஷ்பேக் சலுகை ஆகிய சலுகைகள் கிடைக்கின்றன. 

iPhone SEக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 13 பிளிப்கார்ட்டில் (Flipkart) ரூ.74,990க்கு விற்கப்படுகிறது. எனினும், இதை ரூ.58,300-க்கும் குறைவான விலையில் வாங்க முடியும். ஈ-காமர்ஸ் இயங்குதளமான பிளிப்கார்ட், பழைய ஐபோன் 11 ஐ 16,600 ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறது. 

iPhone SE 2020 இல் பெரும் தள்ளுபடி

அதே நடைமுறை இங்கேயும் பொருந்தும். உங்களின் தற்போதைய மொபைலின் பரிமாற்ற மதிப்பைச் சரிபார்த்து, புதிய பர்ச்சேஸ்களுக்கு அதை பயன்படுத்திக்கொள்ளவும். Apple iPhone SE 2020 தற்போது Flipkart இல் ரூ.29,999-க்கு விற்கப்படுகிறது. இது அதே தளத்தில் அதன் அசல் விலையான ரூ.39,900ஐ விட 24 சதவீதம் குறைவாகும். இந்தச் சலுகை iPhone SE 2020 இன் 64GB கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு வகைகளுக்கானது.

Apple iPhone 13: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

iPhone 13 128GB சேமிப்பு மாறுபாட்டின் அறிமுக விலை ரூ. 79,900. எனினும் Flipkart இல், இந்த ஃபோன் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி பெறுகிறது. அதாவது, இந்த போனை ரூ.74,900க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனை வாங்க சிட்டி பேங்கின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடித் தள்ளுபடியாக ரூ.1000 தள்ளுபடு கிடைக்கும்.  அதன் பிறகு iPhone 13 இல் ரூ.18,850 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது. முழுமையான சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடிந்தால், போனின் விலை வெறும் ரூ.55,140 ஆக குறைந்துவிடும். 

ALSO READ | Flipkart Offer! வெறும் ரூ.4,499-க்கு கிடைக்கிறது Mi Smart TV 

Apple iPhone 13: விவரக்குறிப்புகள்

ஆப்பிள் ஐபோன் 13, 6.1 இன்ச் ரெடினா டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஃபோன் 12MP + 12MP ரெசல்யூஷன் கொண்ட இரட்டை பின்புற கேமராக்களுடன் வருகிறது. இது 12MP செல்ஃபி லென்ஸையும் கொண்டுள்ளது. iPhone 13 128GB இல் தொடங்குகிறது மற்றும் 64GB பதிப்பில் வராது. ஐபோன் 13 இல் A15 பயோனிக் சிப் உள்ளது.

iPhone SE 2020: விவரக்குறிப்புகள்

இதேபோல், ஐபோன் SE ஆனது ஆப்பிளின் (Apple) மலிவான ஸ்மார்ட்போன் ஆகும். இது 4.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் பின்புறம் மற்றும் முன்புறத்தில் ஒரு கேமராவுடன் வருகிறது. செல்ஃபி கேமரா 7எம்பி ஷூட்டர் உள்ளது. பின் கேமரா 12எம்பி-க்கானது. இதில் A13 பயோனிக் சிப்செட் உள்ளது. பரிமாற்றம் செய்யப்படும் தொலைபேசி மற்றும் ஜிப் குறியீட்டைப் பொறுத்து விலைகள் மாறுபடலாம். Flipkart ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளிலும் கேஷ்பேக் வழங்குகிறது.

ALSO READ | Fliplkart Offer: ரூ.299 -க்கு Realme 8 5G ஸ்மார்ட்போனை வாங்குவது எப்படி? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News