Flipkart offer: ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனையாகும் Realme 5ஜி ஸ்மார்ட்போன்

பிளிப்கார்ட் ஆஃபரில் ரியல்மீ 5ஜி ஸ்மார்ட்போனை 8 ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம்

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 5, 2022, 01:13 PM IST
  • ரியல்மீ ஸ்மார்ட்போனுக்கு பம்பர் ஆஃபர்
  • பிளிப்கார்டில் வெறும் ரூ.8 ஆயிரத்துக்கு வாங்கலாம்
  • எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அறிவித்துள்ளது ரியல்மீ
 Flipkart offer: ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனையாகும் Realme 5ஜி ஸ்மார்ட்போன்  title=

Realme Refresh Days விற்பனை பிளிப்கார்ட்டில் நடந்து வருகிறது. இந்த ஆஃபரில் Realme 9 Pro + 5G ஸ்மார்ட்போனை பாதிக்கும் குறைவான விலையில் வாங்கலாம். சிறந்த கேமரா குவாலிட்டி இருப்பதால், கேமரா யூசேஜ் அதிகம் இருப்பவர்கள் இந்த போனை வாங்கலாம். தவறாமல் அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். OIS உடன் 50MP கேமரா இருக்கிறது. இந்த போனை ஆஃபரில் 8 ஆயிரம் ரூபாய்க்கு பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

இந்த ஆஃபர் ஜூலை 2 ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 6 ஆம் தேதி கடைசி என்பதால், ரியல்மீ ஸ்மார்ட்போனுக்கு அறிவிக்கப்பட்ட ஆஃபர் இறுதிக்கட்டத்தில் உள்ளது. 5ஜி ஸ்மார்ட்போனில் பட்ஜெட் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று. இந்த ஆஃபரில் என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | ஏர்டெல் அட்டகாசம்: இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ. 6000 கேஷ்பாக்

Realme தள்ளுபடி

Realme 9 Pro+ 5G ஸ்மார்ட்போன் 29,999 ரூபாய்க்கு பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆஃபரில் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் 26,999 ரூபாய்க்கு கிடைக்கும். ஆரம்பமே 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கொடுத்திருக்கிறது என்றாலும், இன்னும் பல சலுகைகளையும் அறிவித்துள்ளது. அதாவது, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு யூசர்களுக்கு இந்த தள்ளுபடியில் இருந்து கூடுதல் சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

Realme 9 Pro+ 5G வங்கிச் சலுகை

Realme 9 Pro + 5G ஸ்மார்ட்போனை எந்த வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்களுக்கு கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால் 6 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் 20,999 ரூபாய்க்கு நீங்கள் ஸ்மார்ட்போனை வாங்கலாம். கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைத்துவிடும். 

மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோவின் 730 ஜிபி திட்டம்

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

Realme 9 Pro + 5G ஸ்மார்ட்போனுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. அதிகபட்சமாக ரூ.12,500 எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால், உங்களுக்கு இவ்வளவு சலுகை கிடைக்கும். ஆனால் உங்கள் பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.12,500 தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை உங்கள் ஸ்மார்போனுக்கு முழுச்சலுகையும் கிடைக்கும்பட்சத்தில் 8,499 ரூபாய்க்கு Realme 9 Pro + 5G ஸ்மார்ட்போனை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News