ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் புதிய மொபைல் எண்ணைப் பெறுவதற்கும், ஆதார் அட்டை அவசியம். ஆனால், ஒரு சிலருக்கு ஆதார் அட்டையுடன் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன? என்ற சந்தேகம் இருக்கும். உடனடியாக தெரிந்து கொள்வது எப்படி? என்ற கேள்வியும் இருக்கும். இதற்காக மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் ஆதார் எண்ணில் எத்தனை எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறியலாம். TAFCOP போர்டல் மூலம், உங்கள் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
தொலைத்தொடர்புத்துறை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள TAFCOP இணையதளம் மூலம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வசிக்கும் மக்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் விவரங்களை நொடிப்பொழுதில் அறிந்து கொள்ளலாம்.
ஆதார் மொபைல் எண்ணை எப்படி தெரிந்து கொள்வது?
* முதலில் tafcop.dgtelecom.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
* அங்கு சாட்பாக்ஸில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
* இப்போது உங்களுக்கு வந்திருக்கும் ஒடிபியை பதிவு செய்ய வேண்டும்.
* இதனை பதிவு செய்தவுடன் உங்கள் ஆதாரில் இருக்கும் மொபைல் எண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் மொபைல் எண் புகார் அளிப்பது எப்படி?
ஒருவேளை உங்கள் ஆதாரில் வேறொருவர் மொபைல் எண்ணும் இருந்தால் TAFCOP பக்கத்திலேயே புகாரும் அளிக்க முடியும். அந்தப் பக்கத்தில் ’This is not my number’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் ஆதாரில் இருந்து தேவையற்ற மொபைல் எண்ணை நீக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நீக்கிவிடலாம்.
மேலும் படிக்க | வெறும் 3 ஆயிரம் ரூபாய்க்கு நோக்கியாவின் ஃபிளிப் போன் விற்பனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR