Nokia G21 Flipkart Smartphone Deal: உலகம் முழுவதும் ஏறக்குறைய அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். மொபைல் சந்தையில் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் உள்ளன. மொபைல் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி காரணமாக வாடிக்கையாளர்களை கவர பல அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது நீங்கள் சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கிறீர்கள் என்றால், அந்த போனின் சிறப்பம்சங்களுடன், போனின் விலை மற்றும் நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா இல்லையா என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். அதாவது மலிவான விலையில், உங்கள் பட்ஜெட்டுக்கு உட்பட்டு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், நோக்கியா (Nokia) நிறுவனத்தின் நோக்கியா G21 (Nokia G21) ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் சலுகை, தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பயன்படுத்தி 800 ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்கலாம். நோக்கியா G21 ஸ்மார்ட்போனை எப்படி குறைவான விலையில் வாங்கலாம் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
அதாவது நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் ரூ.16,999 விலையில் பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 11% தள்ளுபடிக்கு பிறகு ரூ.14,999க்கு விற்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த போனை Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால், உங்களுக்கு ரூ.750 கேஷ்பேக் கிடைக்கும். அதன் பிறகு இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,249 -க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க: ரூ.15,000க்குள் ஐபோன் வாங்குங்கள்! Flipkart சிறந்த சலுகை
அதேநேரத்தில் நோக்கியா ஜி21 போனை ரூ. 800-க்கும் குறைவாக விலையில் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் உதவியை நாடவேண்டும். 16,999 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த போன் Flipkartல் தள்ளுபடிக்குப் பிறகு எப்படியும் 14,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உங்கள் பழைய போனுக்கு பதிலாக இதை வாங்கினால், ரூ.14,250 வரை நீங்கள் சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப்பலனையும் நீங்கள் பெற்றால், இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.749 ஆக இருக்கும்.
நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் 128ஜிபி உள்சேமிப்பு மற்றும் 6ஜிபி ரேம் வசதி வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியா ஜி21 போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு மற்றும் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவுடன், இந்த 4ஜி ஸ்மார்ட்போனில் 5050எம்ஏஎச் பேட்டரி மற்றும் விரைவில் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. Unisoc T606 செயலியில் பணிபுரியும் இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா உடன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனத்தில் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆதரவைக் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என இந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. .
மேலும் படிக்க: 5G in India: 5ஜி கட்டணம் அதிகரிக்கப்படுமா... Airtel கூறுவது என்ன..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ