Flipkart விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளுக்கு பம்பர் தள்ளுபடிகள்

சுதந்திரதினத்தையொட்டி பிளிப்கார்ட் விற்பனையில் ஸ்மார்ட்டிவிக்களுக்கு பம்பர் தள்ளுபடிகள் மற்றும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 14, 2022, 02:53 PM IST
  • பிளிப்கார்ட் ஆஃபர்
  • டிவிக்களுக்கு அதிரடி சலுகை
Flipkart விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளுக்கு பம்பர் தள்ளுபடிகள் title=

ஸ்மார்ட் டிவி வாங்கும் பிளான் உங்களுக்கு இருந்தால் இது வாடிக்கையாளர்களுக்கு சரியான சந்தர்ப்பம். தற்போது பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை டிவி மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. அதிகபட்சமாக விற்பனை சலுகைகள் 70% வரை தள்ளுபடிகள் கொடுக்கப்படுகின்றன. பிளிப்கார்ட்டில் பிக் சேவிங்ஸ் டே சேல் இப்போதுதான் முடிவடைந்திருந்தாலும் இப்போது புதிய ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விற்பனை மூலம் நீங்கள் மலிவான விலையில் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம்.

அப்ளையன்ஸ் போனான்சா விற்பனை ஆகஸ்ட் 11 முதல் பிளிப்கார்ட்டில் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 15 அன்று முடிவடையும் Flipkart விற்பனையில் நீங்கள் தள்ளுபடிகள், பரிமாற்றச் சலுகைகள் மற்றும் EMIகள் உட்பட பல சலுகைகளைப் பெறுகிறீர்கள். விற்பனைக்கு வங்கி தள்ளுபடியும் உண்டு. இந்த தள்ளுபடி பாங்க் ஆப் பரோடா மற்றும் சிட்டி பேங்க் கார்டில் கிடைக்கும். இரண்டு வங்கிகளின் கார்டுகளுக்கும் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் மலிவான ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினாலும் இந்த விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரின் சிறப்பு சுதந்திர தின விற்பனையில் போன்களுக்கு தள்ளுபடி

ஸ்மார்ட்டிவி சலுகைகள்

OnePlus-ன் 32 இன்ச் திரை அளவுள்ள டிவியை ரூ.11,499க்கு வாங்கலாம். இதில் கவர்ச்சிகரமான தள்ளுபடி கிடைக்கும். அதே சமயம், எல்ஜியின் 32 இன்ச் திரை அளவுள்ள டிவியை ரூ.12,591-க்கு பெறலாம். Xiaomi-யின் HD ரெடி டிவி ரூ.12,149-க்கு கிடைக்கும். இந்த விலை 32 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் டிவிக்கானது. ரியாலிட்டி டிவி 11,564 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

ஸ்மார்ட் டிவி ஆஃபர்

நீங்கள் பெரிய திரை டிவியை விரும்பினால், 43 அங்குல திரை அளவிலும் ஏராளமான விருப்பங்களைக் காணலாம். இந்த அளவுள்ள எல்ஜியின் 4கே ஸ்மார்ட் டிவி தள்ளுபடி விலை ரூ.26,490-ல் கிடைக்கிறது. அதே நேரத்தில், நீங்கள் ரூ.17,499 விலையில் Mi ஸ்மார்ட் டிவியை வாங்கலாம். சாம்சங் நிறுவனத்தின் 43 இன்ச் திரை கொண்ட டிவி ரூ.27,490 விலையில் கிடைக்கிறது

55 இன்ச் டிவி ஆஃபர்

43 அங்குலங்களை விட பெரிய டிவியை நீங்கள் விரும்பினால், இந்த விற்பனையில் ஏராளமான விருப்பங்களைக் காணலாம். நோக்கியாவின் 55 இன்ச் திரை அளவுள்ள டிவியை ரூ.42,499க்கு வாங்கலாம். சாம்சங்கின் 55 இன்ச் திரை QLED TV ரூ.58,999க்கு கிடைக்கிறது. மறுபுறம், சோனியின் 55 இன்ச் திரை டிவி ரூ. 59,999 தள்ளுபடிக்குப் பிறகு கிடைக்கிறது.

மேலும் படிக்க | OPPO K10 5G -க்கு மெகா தள்ளுபடி: பிளிப்கார்ட்டில் முந்துங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News