ஏர்டெல் மற்றும் அமேசான் இணைந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. செட் டாப் பாக்ஸ் வைத்திருக்கும் டிஜிட்டல் டிவி பயனர்கள் இதன் மூலம் சிறந்த பலனைப் பெறலாம். இந்த திட்டத்தில், பயனர்கள் 350ம் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களையும் அமேசான் பிரைம் வீடியோவிற்கு இலவச சந்தாவையும் பெறுவார்கள். பிரைம் வீடியோவில் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இணையத் தொடர்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்க முடியும். இது தவிர, அமேசான் பிரைமில் கிடைக்கும் இலவச ஒரு நாள் டெலிவரி மற்றும் விற்பனைக்கான ஆரம்ப அணுகல், அமேசான் மியூசிக் போன்ற பிற நன்மைகளின் பலனையும் பயனர்கள் பெறுவார்கள்.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், அமேசான் பிரைம் இலவச சந்தா கொண்ட ரீசார்ஜ் திட்டங்களையும் (Airtel Prepaid Plans) வழங்குகிறது. இதில் தினசரி டேட்டாவும் கிடைக்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவும் இந்தத் திட்டங்களுடன் கிடைக்கிறது. இதன் மூலம் 22க்கும் மேற்பட்ட OTT சேனல்களையும் கண்டு அனுபவிக்கலாம்.
ஏர்டெல்லின் ரூ.838 திட்டம்
ஏர்டெல்லின் 56 நாட்கள் முழு வேலிடிட்டியுடன் கூடிய ரூ.838 கட்டணத்திலான திட்டத்தில், தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் பயனர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதியும் இந்த திட்டம் 56 நாட்களுக்கான இலவச அமேசான் பிரைம் சந்தாவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) நன்மைகளையும் பெறுவீர்கள்.
ஏர்டெல்லின் ரூ.1,199 திட்டம்
ஏர்டெல்லின் 84 நாட்கள் முழு வேலிடிட்டியுடன் கூடிய ரூ.1,199 கட்டணத்திலான திட்டத்தில், தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் பயனர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதியும் இந்த திட்டம் 84 நாட்களுக்கான இலவச அமேசான் பிரைம் சந்தாவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) நன்மைகளையும் பெறுவீர்கள். இந்த திட்டம் வரம்பற்ற 5G டேட்டாவையும் வழங்குகிறது.
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம் மொபைல் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால், பலர், மலிவான கட்டணங்கள் தரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி படை எடுக்க, அதிர்ச்சி அடைந்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, தற்போது பல வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ