கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்கள் எல்லாம் களைக்கட்டியுள்ளது. கொடைக்கானல் முதல் நீலகரி வரை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலானவர்கள் குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நிறைய உள்ளது. மலைப்பிரதேசங்கள் மற்றும் நீண்ட தொலைவுக்கு காரில் செல்லும் முன் உங்கள் கார் நீண்ட பயணத்திற்குத் தயாராக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாத இடத்தில் உங்கள் கார் பழுதடைந்தால், சந்திக்க வேண்டிய சிக்கலைத் தவிர்க்க, சில விஷயங்களை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது அவசியம்.
வெளியூர் பயணத்துக்கு முன் கவனிக்க வேண்டியவை
1. கார் பேட்டரி
கார் பேட்டரி மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். இது காரின் அனைத்து மின் கூறுகளையும் இயக்குவது மட்டுமின்றி இன்ஜினை ஸ்டார்ட் செய்யவும் உதவுகிறது. பேட்டரி பழுதாகிவிட்டால், சாலையோரத்தில் எங்கு வேண்டுமானாலும் சிக்கிக்கொள்ளலாம். இதை தவிர்க்க, பயணத்திற்கு புறப்படுவதற்கு முன், பேட்டரியில் நீரின் அளவை சரிபார்க்கவும். உங்கள் பேட்டரி 3 வருடங்களுக்கும் மேலாக இருந்தால், அதை சரிபார்ப்பது அல்லது மாற்றுவது நல்லது. பொதுவாக ஒரு நல்ல பேட்டரியின் ஆயுள் 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும்.
2. ஏர்பில்டரை மாற்றவும்
சில நேரங்களில் அழுக்கு ஏர்பில்டர்கள் கார் பழுதடைய காரணமாக இருக்கலாம். ஏர்பில்டர் அழுக்காகிவிட்டால், காற்று இயந்திரத்தை அடைய முடியாது அல்லது அழுக்கு காற்று அதனுடன் கலந்து இயந்திரத்தை அடைகிறது. இதன் காரணமாக, காரின் மைலேஜ் குறைவதுடன், இன்ஜினும் சேதமடையலாம். ஏசி ஏர் ஃபில்டர் அழுக்காக இருந்தால், ஏசி சரியாக இயங்காது. முடிந்தால், அதிக சக்தி கொண்ட வேக்கம் கிளீனர் மூலம் ஏர்பில்டரை சுத்தம் செய்யவும். அது மிகவும் அழுக்காக இருந்தால், அதை மாற்றுவது நல்லது.
3. எரிபொருள் மீது கவனம்
நீண்ட பயணத்திற்கு செல்வதற்கு முன் எரிபொருள் முழுமையாக நிரப்புவது புத்திசாலித்தனம். ஆனால், நீங்கள் பாதிக்கும் குறைவான எரிபொருளுடன் இயங்கினால், சீக்கிரம் அடுத்த பெட்ரோல் பம்பில் நிறுத்தி, டேங்கை நிரப்பவும். குறிப்பாக, நீங்கள் மலைப்பாங்கான அல்லது காட்டு பகுதிகளுக்கு புறப்பட்டால், கூடுதல் எரிபொருள் கேனை எடுத்துச் செல்வது நல்லது.
4. ஆயில்களை நிரப்பவும்
எஞ்சின் ஆயில், என்ஜின் கூலன்ட், பிரேக் ஆயில், டிரான்ஸ்மிஷன் ஃப்ளூயட், ரேடியேட்டர் கூலன்ட், விண்ட்ஷீல்ட் ஃப்ளூயட் மற்றும் பவர் ஸ்டீயரிங் ஃப்ளூயட் உள்ளிட்ட பல வகையான ஆயில்கள் காரில் சேர்க்கப்படுகின்றன. பயணத்தைத் தொடங்குவதற்கு முன், காரை ஒரு நல்ல மெக்கானிக்கிடம் காட்டி, இந்தத் ஆயில்கள் அனைத்தையும் சரிபார்த்து, தேவைப்பட்டால், டாப்-அப் செய்துகொள்ளவும்.
5. பிரேக் பேட்களை சரிபார்க்கவும்
பிரேக்குகள் காரின் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும், எனவே நீண்ட பயணத்திற்கு செல்லும் முன், பிரேக் பேட்களை சரிபார்க்க வேண்டும். காரின் நான்கு சக்கரங்களின் பிரேக் பேடுகளையும் ஒரு நல்ல மெக்கானிக்கிடம் காட்டி, அவை பழுதடைந்திருந்தால் மாற்றவும்.
6. டயர்களை சரிபார்க்கவும்
ஒரு நீண்ட பயணத்திற்கு புறப்படுவதற்கு முன், நான்கு டயர்களிலும் காற்றழுத்தம் மற்றும் ஸ்டாண்ட் பை சக்கரத்தின் டயரை சரிபார்க்கவும். சரியான காற்றழுத்தத்திற்கு கார் உபயோகக் கைடை பார்க்கவும். அதற்கேற்ப காற்றழுத்தத்தை பராமரிக்கவும்.
மேலும் படிக்க | Amazon Great Summer Sale ஆரம்பம்: இந்த சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு செம தள்ளுபடி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ