அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், அந்த பொழுக்குழு செல்லும் என அறிவித்துள்ளது. இது ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பது, எடப்பாடி அணிக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இனி அதிமுகவின் ஒற்றை தலைமை எடப்பாடி மட்டுமே என அவர்கள் கூக்குரலிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க | O Panneerselvam: இபிஎஸ்-இன் தாத்தா கட்சியா அதிமுக? பிரஸ் மீட்டில் சீறிய ஓபிஎஸ்
வைத்திலிங்கம் பேசும்போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. அந்த பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார். அதனால், ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கும் சிவில் வழக்கை ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்து நடத்துவோம் என கூறியிருக்கும் அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்த பாதகமும் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தீர்ப்பை குறித்து முழுமையாக தெரியாமல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பலர் பேசி வருவதாகவும் வைத்திலிங்கம் சாடியுள்ளார்.
இந்த தீர்ப்புக்குப் பிறகு பலரும் ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாகவும், அவருக்கு இனி அதிமுகவில் இடமில்லை என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து வைத்திலிங்கத்திம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காட்டமாக பதில் அளித்த அவர், ஓபிஎஸ் புதுக்கட்சி தொங்குவார்... அம்மா திமுக தொடங்குவார் என அரசியல்வாதிகள் பேசமாட்டார்கள், பைத்தியக்காரர்கள் தான் பேசுவார்கள் என சாடியுள்ளார். இதனிடையே ஓ பன்னீர்செல்வம் விரைவில் மக்களை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதிமுக என்ன எடப்பாடி பழனிசாமி தாத்தா அரம்பித்த கட்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ