Weather Forecast in Tamil Nadu: நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் வெப்பநிலையில் லேசாக உயர்ந்ததிருந்தது. ஆனாலும் மற்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மழை (Heavy Rainfall) பெய்தது.
சென்னையில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 37.4 டிகிரி செல்சியஸ் பதிவாகின. அதேபோல மாவட்ட அளவில் வேலூரில் 38.9 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி 38.6 டிகிரி செல்சியஸ், மற்றும் மதுரை 37 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகின.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுத்துரை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை (Temperature) உயரும் என்று சென்னை பிராந்திய வானிலை மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ALSO READ | கொரோனா டெஸ்ட் எடுக்க முடியாது, தாறுமாறாக ரகளை செய்த குடும்பம்!
மேற்கு மாவட்டங்களில் பகலில் பலத்த மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 30-40 கி.மீ வேகத்தில் ஒளியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய (Thunderstorms) மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
"காற்று உறுதியற்ற தன்மை நீடிப்பதால், மேற்கு மண்டல உள்மாவட்டங்களிலும் (Western Tamil Nadu) மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகள் மாலை இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையில், வடக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட ஒன்று அல்லது இரண்டு டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR