விஷால் வழக்கில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ்!!

விஷால் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 30, 2019, 01:38 PM IST
விஷால் வழக்கில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ்!! title=

சென்னை: விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கங்கத்தில் முறையாக கணக்குகள் பராமரிக்கப்படவில்லை என பல புகார் எழுந்தவண்ணம் இருந்து. அதனடிப்படையில் விஷால் தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அரசு சார்பில் பூட்டு போடப்பட்டது. இதனை தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்தை களைத்து விட்டு, அரசு சார்பாக அதிகாரி ஒருவரின் தலைமையில் சங்கம் செயல்பட வேண்டும் என எதிர் தரப்பினரால் வழக்கு தொடரப்பட்டது. 

பின்னர் விஷால் தலைமையிலான  தயாரிப்பாளர் சங்கம், விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காததும், கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காததும் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க, தமிழக அரசு சார்பாக மாவட்டப் பதிவாளர் அந்தஸ்தில் இருக்கும் சேகர் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறப்பு அதிகாரியான சேகரின் நியமனத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஷால். இந்த வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதைக் குறித்து மே 7 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்பியது சென்னை உயர்நீதிமன்றம்.

Trending News