கணவரின் ஒர்க்‌ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தவரை காதலனாக்கிய பெண் - கட்டிலுக்காக கொலைகாரியான கதை

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை காதலனை வைத்து மனைவியே கொலை செய்திருக்கிறார். கொலை செய்து நாடகமாடியவர்கள் போலீசில் பிடிபட்டது எப்படி ?

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 4, 2022, 08:34 PM IST
  • தகாத உறவால் அரங்கேறிய கொடூரம்
  • துடிதுடிக்கக் கொல்லப்பட்ட கணவர்
  • மனைவியின் வெறிச்செயல் - வாக்குமூலம்
கணவரின் ஒர்க்‌ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தவரை காதலனாக்கிய பெண் - கட்டிலுக்காக கொலைகாரியான கதை title=

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.புளியங்குளம்  கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். மின்வாரியத் துறையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுனிதா. இந்நிலையில், நரிக்குடி - திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் முத்துராமலிங்கம்  இறந்து கிடப்பதாக திருச்சுழி காவல் நிலையத்திற்கு  தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலமாக கிடந்த முத்துராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர் முத்துராமலிங்கம் விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது கொலையா? என விசாரணை மேற்கொண்டனர். 

முத்துராமலிங்கம், திருச்சுழி ,விருதுநகர்,கள்ளக்காதலுக்காக கணவரை கொன்ற மனைவி, சுனிதா, கொலை,முத்துராமலிங்கம், மலையரசன், கள்ளக்காதல்,ரகசிய காதல்

மேலும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது.

சுனிதாவின் கணவர் முத்துராமலிங்கம் நடத்தி வந்த ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்த விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பள்ளிமடத்தைச் சேர்ந்த மலையரசன் ( 22) என்ற இளைஞருடன் ரகசிய தொடர்பில் இருந்ததை கணவர் கண்டித்ததால் கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டதாக கூறியிருக்கிறார். 

முத்துராமலிங்கம், திருச்சுழி ,விருதுநகர்,கள்ளக்காதலுக்காக கணவரை கொன்ற மனைவி, சுனிதா, கொலை,முத்துராமலிங்கம், மலையரசன், கள்ளக்காதல்,ரகசிய காதல்

கடந்த 1 ம்தேதி வீட்டிற்கு வந்த கணவனை கள்ளக் காதலன் மலையரசன் மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த அவரது நண்பர் சிவா ஆகியோர்  சேர்ந்து இரவு வீட்டிற்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கட்டையால் அடித்து கொலை செய்ததாகக் கூறியிருக்கிறார். பின்னர்  விபத்து நடந்தது போன்று நாடகமாடத்  தப்பிக்க நினைத்திருக்கிறார்கள். 

முத்துராமலிங்கத்தின் சடலத்தை மலையரசன் மற்றும் சிவா இருவருக்கும் இருசக்கர வாகனத்தில் வைத்து  பேருந்து நிறுத்தம் அருகே விபத்து ஏற்பட்டு இறந்ததை போன்று செட்டப் செய்து விட்டு தப்பி சென்றனர். மேலும் டூவீலரில் சென்ற போது
முத்துராமலிங்கம் சடலத்தின் இரு  கால் விரல்களும் தரையில் உரசியபடி வந்ததால் கால் கட்டை விரல்கள் முழுமையாகத் தேய்மானம் அடைந்திருந்தது பிரேத பரிசோதனையின் போது போலீசாருக்கு தெரியவந்தது. 

மேலும் படிக்க | ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது: சித்ராவின் தந்தை மனு தாக்கல்

இதனை தொடர்ந்து சுனிதா, மலையரசன், அவரது நண்பர் சிவா(21) ஆகிய  மூவரையும்  திருச்சுழி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்காகக் கணவரை கொலை செய்து விபத்து போல் நாடகமிட திட்டமிட்டிருந்தும் மோப்பநாயும் கால் கட்டை விரல்களும் காட்டிக் கொடுத்ததால் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார் சுனிதா. 

மேலும் படிக்க | OTP நம்பரை சொல்ல இவ்ளோ லேட்டா? - ஆத்திரத்தில் ஐடி ஊழியரை கொன்ற ஓலா ஓட்டுநர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News