Viral Wedding: கோவிட் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க மதுரை ஜோடி செய்த சூப்பர் ஐடியா!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும், பூமியில் தான் நடைபெறவேண்டும் என்று சொல்வது வழக்கம். இந்த மதுரை ஜோடியின் திருமணம் சொர்க்கத்திற்கு கொஞ்சம் கீழே, பூமிக்கு கொஞ்சம் மேலே நடைபெற்றது!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 24, 2021, 08:59 AM IST
  • கோவிட் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க மதுரை ஜோடி செய்த சூப்பர் ஐடியா!
  • விமானத்தில் 161 உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மேலே விமானம் பறந்தபோது மணமகன் தாலி கட்டினார்
Viral Wedding: கோவிட் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க மதுரை ஜோடி செய்த சூப்பர் ஐடியா! title=

மதுரை: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, நாட்டை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. நோயின் தாக்கத்தை மட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்துள்ளன.

தமிழகத்தில் ஏற்கனவே லாக்டவுன் அமலில் இருந்தாலும், இன்று முதல் விதிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமலில் இருக்கும் கோவிட் கட்டுப்பாடுகளால், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை வரும் நிகழ்வு, அதை கட்டுப்பாடுகளுக்குள் அடக்க விரும்பாத பலர் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகின்றனர். ஆனால் மதுரையில் வசிக்கும் ராகேஷ்-தக்ஷினா என்ற ஜோடி, தங்கள் திருமணத்தை தள்ளியும் போடவேண்டாம், ஆனால் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களுடைய ஆசையை நிறைவேற்றியும் விட்டார்கள்.

Also Read | ஒற்றை ரூபாய் நாணயத்தை கொடுத்து லட்ச ரூபாய் பெறலாம்

வாழ்க்கையின் மிக சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றான தங்கள் திருமண விழாவை ஆடம்பரமாக நடத்த முடியாவிட்டாலும், நெருங்கிய சொந்த பந்தங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள் இந்த மதுரை தம்பதிகள்.

திருமணம் செய்யத் தயாராக இருந்த லட்சக்கணக்கான தம்பதிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் தடையை ஏற்படுத்தியதற்கு காரணம், தங்களது விருந்தினர்களின் பட்டியலையும் பல நிகழ்வுகளையும் குறைக்க வேண்டியிருக்கும் என்பதே. ஆனால், இதற்கெல்லாம் இடையே, தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த இந்த ஜோடி தனித்துவமாக திருமணம் செய்துக் கொண்டு தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளனர். 

இந்த ஜோடி மதுரையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் விமானம் ஒன்றை முன்பதிவு செய்தனர். விமானத்தில் 161 உறவினர்கள் இருந்தனர்.  விமானம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மேலே வானில் பறந்து சென்றபோது,  மாப்பிள்ளை, மணமகளுக்கு தாலி கட்டினார்.

Also Read | இன்று முதல் மாத இறுதி வரை தமிழகத்தில் அனுமதி எதற்கு? தடையில்லா சேவை எவை?

இந்த வித்தியாசமான திருமணத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, ஒரு பயனர் அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “மதுரைச் சேர்ந்த ராகேஷ்-தட்சினா, இரண்டு மணி நேரம் விமானத்தை வாடகைக்கு எடுத்து திருமணத்தை வானத்தில் செய்து கொண்டார்கள். பெங்களூரிலிருந்து மதுரைக்கு செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திருமணம் குடும்ப உறுப்பினர்கள் முன் திருமணம் நடைபெற்றது” என்று அந்த டிவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும், பூமியில் தான் நடைபெறவேண்டும் என்று சொல்வது வழக்கம். இந்த மதுரை ஜோடியின் திருமணம் சொர்க்கத்திற்கு கொஞ்சம் கீழே, பூமிக்கு கொஞ்சம் மேலே, மீனாட்சி அன்னை-சொக்கநாதர் இருக்கும் இடத்தில் நடைபெற்றது வித்தியாசமானது தானே!

வானில் பறந்துக் கொண்டே திருமணத்தை முடித்த தம்பதிகளில் திருமண வீடியோவைப் பாருங்கள்:

விழாவின் போது உறவினர்கள் உற்சாகமடைந்து மலர்களை தூவி வாழ்த்தினார்கள். மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி என்னும் மங்கள நாணை கட்டுவதை காட்டும் வீடியோ இது. இந்த் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

Also Read | இன்றைய ராசிபலன், 24 மே 2021: திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News