விக்கிரவாண்டி, நாங்குநேரி அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிப்பு!

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்! 

Last Updated : Sep 25, 2019, 02:43 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிப்பு! title=

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்! 

விக்கிரவாண்டியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய செயலாளர் எம்.ஆர். முத்தமிழ் செல்வனும், நாங்குநேரியில் நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ரெட்டியார்பட்டி வெ நாராயணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விக்கிரவாண்டியில் திமுக சார்பில் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் தற்போது வரை அறிவிக்கவில்லை.

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணிக்குழுவுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுக அரசு. 

இதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு தேர்தல் பணிக்குழுவும் நியமிக்கப்பட்டது. பொன்முடி தலைமையிலான அந்தக் குழுவுடன், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது, பிரச்சார யுக்தி வகுத்தல், மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சார திட்டங்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சாரங்கள் கூட்டங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் வாக்கு வித்தியாசம் குறைந்தது போல் விக்கிரவாண்டியில் குறையக் கூடாது என்றும், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெறும் முனைப்பில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Trending News