முதலமைச்சர் எடப்பாடியாருக்குக் அவசரமாக கடிதம் எழுதிய நடிகர் விஜயகுமார்..!

மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் நேரத்தில், மூத்த நடிகர் விஜயகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

Last Updated : Nov 18, 2020, 10:54 AM IST
    1. பல மாவட்டங்களில் உள்ள ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன.
    2. 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு அறிவிக்கப்படும்.
    3. செம்பரம்பாக்கம் ஏரியின் கரையில் வாழும் மக்களைப் பாதுகாக்குமாறு விஜயகுமார் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடியாருக்குக் அவசரமாக கடிதம் எழுதிய நடிகர் விஜயகுமார்..! title=

மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் நேரத்தில், மூத்த நடிகர் விஜயகுமார் (Vijayakumar) தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு (Edappadi K Palaniswami) ஒரு முக்கியமான கோரிக்கையை விடுத்துள்ளார். ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் (Chembarambakkam Lake) கரையில் வாழும் மக்களைப் பாதுகாக்குமாறு விஜயகுமார் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Chembarambakkam Lake, Chennai - Popular Tourist Attraction in Chennai

 

ALSO READ | 67 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன - எச்சரிக்கை!!

விஜயகுமாரின் கடிதத்தில்., “சென்னை  (Chennai) மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர் பகுதியில் நான் பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பொழுது, எங்களது பகுதியிலிருந்து அடையாறு வரை பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது. இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியல் நீர் மட்டம் 21 அடியைத் தாண்டி உயர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் 2015ம் ஆண்டைப் போல பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

 

Vijayakumar: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes

ஆகவே, தாங்கள் கவனத்தில் இதைக் கொண்டு முன்னேற்பாடாக ஏரியில் உள்ள தண்ணீரை அளவுடன் திறந்துவிட உத்தரவு பிறப்பித்ததால், கரையோரம் இருப்பவர்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்க இயலும். எனவே தயவுகூர்ந்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். தங்களால் இதை  செய்ய இயலும் என நான் ஒருமனதாக நம்புகிறேன்.

 

கொரோனா எனும் கொடு நோயிலிருந்து நம் தமிழக மக்களை எவ்வண்ணம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களோ, அவ்வண்ணமே கரையோரம் வசிக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என கடிதத்தில் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ALSO READ | பயப்பட வேண்டாம்! தற்போதைக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்படாது

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News