கோயம்பேடு காய்கறி சந்தையில் விலைகள் கடும் வீழ்ச்சி; காரணம் என்ன

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கி கோர தாண்டவம் ஆடி வருகிறது.  தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2021, 10:07 AM IST
  • கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கி கோர தாண்டவம் ஆடி வருகிறது.
  • தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.
  • கொரோனா பரவலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் கோயம்பேடு சந்தை மூடப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் விலைகள் கடும் வீழ்ச்சி; காரணம் என்ன  title=

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கி கோர தாண்டவம் ஆடி வருகிறது.  தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இதனை தடுக்கும் வகையில், வரும் 25ம் தேதி பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வாகனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை (CoronaVirus) அடுத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் கோயம்பேடு சந்தை மூடப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை தொடர்ந்து குறைந்து வருகின்றன. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ஒன்றுக்கு ரூ.20-க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கருத்து தெரிவ்க்கையில், தமிழகத்தில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஊரடங்கு அச்சத்தால் சென்னையில் வசிக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சென்னையில் இருந்து தொடர்ந்து வெளியேறுகின்றனர்.சுப நிகழ்ச்சிகளும் குறைந்துவிட்டன என்பதோடு, பல திருமணங்கள் கூட ஒத்தி போடப்பட்டுள்ளன.

ALSO READ | கட்டுப்பாடுகளை மீறி வீதியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்: எச்சரிக்கும் காவல்துறை

ஆனால், காய்கறிகளின் வரத்து வழக்கம்போலவே உள்ளது. விற்பனையைவிட, சென்னைக்கு வரும் காய்கறிகள் அதிகமாக உள்ளதால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள  காய்கறி சந்தைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஓசூர், நீலகிரி,  ஒட்டன்சத்திரம், பெரம்பலூர், மேட்டுப்பாளையம், தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் காய்கறிகள் வருகின்றன.

முன்னதாக, விளை நிலங்களில் ஞாயிற்றுக் கிழமை பறிக்கப்படும் காய்கறிகள், அன்று இரவே சென்னைக்கு வந்தால் தான், திங்கட்கிழமை அன்று காய்கறிகள் பொது மக்களுக்கு கிடைக்கும். எனவே,  காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் வலுயுறுத்தியுள்ளனர் . 

ALSO READ | காய்கறி லாரிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: கோயம்பேடு வியாபாரிகள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News