டிடிவி தினகரன் கூட்டணி
நாடாளுமன்ற தேர்தலில் அமமுக, பாஜக உடன் கூட்டணி சேருமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். திருக்கடையூரில் கோவிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, " நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார். பாஜக உடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியிருக்கும் தினகரன், ஒருவேளை கூட்டணி உறுதியானால் தங்கள் கட்சிக்கு இருக்கும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார். மேலும், ஓ. பன்னீர்செல்வம் தங்களுடன் இணக்கமாக இருப்பதால், அவருடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவேன் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
இதன் மூலம் டிடிவி தினகரன் பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உறுதியாகியுள்ளது. அதேசமயத்தில் ஓ.பன்னீர் செல்வம் அமமுகவில் சேர்ந்து போட்டியிடுவாரா? அல்லது பாஜகவில் இணைந்து போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் இருக்கிறார். அவர் கடந்த முறை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இம்முறை எந்த சின்னத்தில் நிற்பார் என்பது உறுதியாகவில்லை.
மேலும் படிக்க | திமுகவில் 5 சிட்டிங் எம்பிகளுக்கு சீட் கன்பார்ம் - எந்தெந்த தொகுதிகள்?
அமித் ஷா உத்தரவு
ஏனென்றால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால், பாஜக அல்லது அமமுக இரண்டில் ஏதேனும் ஒரு கட்சியின் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவு தான் அவரின் அடுத்தகட்ட அரசியல் பயணத்தை தீர்மானிக்கும். பாஜக சின்னமான தாமரையில் தன்னுடைய ஆதரவாளர்களை நிறுத்தினால் அவருக்கும் டிடிவி தினகரனுக்கும் இருக்கும் இணக்கம் மீண்டும் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அமமுகவின் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டால் பாஜகவின் ஆதரவை மேலும் இழக்கும் சூழல் உருவாகும். மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் பார்வை ஓபிஎஸ்ஸூக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய வேண்டும் என அமித் ஷா விரும்புகிறார்.
இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்
இதனால், இடியாப்ப சிக்கலில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் தலைமையை ஏற்க போகிறாரா? அல்லது அமித் ஷா தலைமையை ஏற்க போகிறாரா? என்பது அவரின் கூட்டணி அறிவிப்பில் தெரிந்து விடும். அவரின் அரசியல் எதிர்காலத்துக்கு எது சரியாக இருக்கும் என்பதை மனதில் வைத்து தான், இந்த முடிவை எடுத்தாக வேண்டும் என்பதால், இப்போது இது குறித்து தான் தீவிரமான ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ