அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை.. அனைத்து தமிழக பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு

TN School Department Important Order: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆசிரியர்கள் போராட்டம்.. மாணவி செய்த செயல்

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 23, 2024, 05:36 PM IST
அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை.. அனைத்து தமிழக பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு title=

Tamil Nadu Government School Latest News: வேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பயின்று வரும் சில மாணவிகள் சேர்ந்து வளைகாப்பு நடத்துவது போன்று செட் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது பெரும் சர்ச்சையைஉ அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வளைகாப்பு ரீல்ஸ் வீடியோ

வேலூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி விசாரணைக்கு உத்தரவிட்டு, பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

விசாரணை நடத்தப்பட்டு ஆசிரியர் ஒருவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து போலியாக கணக்கு காட்டியதும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக் கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. 

மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா?

பள்ளிக் கல்வித்துறை உத்தரவில், "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு மாணவர்களின் வருகை குறித்து ஆசிரியர்கள் முறையாக கணக்கீடு செய்வதோடு, ஒருவேளை மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டு உள்ளது 

மாணவர்களுடன் சேர்ந்து உணவு உண்ண வேண்டும்

மேலும் மதிய உணவு வேளையில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும் எனவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

சக ஆசிரியர்கள் போராட்டம் 

மறுபுறம் வளைகாப்பு ரீல்ஸ் விவகாரத்தில் மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க என்ன காரணம் எனக்கேட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு எதிராக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் சக ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க - Important Notice | தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!

மேலும் படிக்க - eKYC Deadline | ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! உஷார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News