திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாடு கொலை புகார் எதிரொலி. ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்டு மாதிரி எடுத்துச் செல்லப்பட்ட நிலை நிலையில் நீதிமன்றத்தில் காளை மாடு என உறுதி செய்யப்பட்டது. தற்போது, அங்கிருந்த எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு வாடகைக்கு விட்ட வீடு
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஸ்பென்சர் காம்பவுண்ட் திருவள்ளுவர் 1வது தெருவில் ராஜா முகமது என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ராஜா முகமது கடந்த 2018 ஆம் ஆண்டு வாடகைக்கு விட்டுள்ளார்.
கொரோனாவுக்கு பின் பிரச்சனை
முறையாக வாடகை கொடுத்து வந்த மணிகண்டன், கொரோனாவிற்கு பின் சரியாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. வாடகை தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது பலமுறை மணிகண்டனிடம் கேட்டும் பணம் தரவில்லை. இது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
மாந்திரீக அச்சுறுத்தல்
தகராறின் போது மாந்திரீகம் செய்து பசுவை பலியிட்டு வீட்டில் புதைத்துள்ளதாகவும் அதே போல் உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என மணிகண்டன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்தார்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்!
மிருகவதை தடைச்சட்டம்
புகாரின் பேரில் போலீசார் தற்பொழுது 429 மிருக வதை தடை சட்டம், 508 மிருகங்களைக் கொன்று புதைப்பது, மற்றும் 506/1 என்ன மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து திண்டுக்கல் மேற்குத் தாசில்தார் ரமேஷ் பாபு தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு முன்னிலையில் போலீசார் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மாடு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர்.
எச்சங்கள் அகற்றும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி
பின்னர் புதைக்கப்பட்ட மாட்டின் எலும்பு மற்றும் சதை ஆகியவற்றை ஆய்வுக்காக கால்நடை மருத்துவர் குழு எடுத்துச் சென்றது. மருத்துவர்கள் வழங்கக்கூடிய அறிக்கையை தொடர்ந்து அங்கு புதைக்கப்பட்டது காளைமாடா அல்லது பசுமாடா என்பது தெரிய வரும்.
இதற்கிடையே மருத்துவர்கள் வழங்கிய அறிக்கையில் புதைக்கப்பட்டது காளை மாடு தான் என உறுதியானது அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி புதைக்கப்பட்ட இடத்திலிருந்து மாட்டின் கழிவுகளை காங்கிரஸ் கட்சியின் சார்பாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து இன்று ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச் மாதம் ஊழியர்களுக்கு 3 பெரிய மாஸ் செய்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ