TN MP பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: HC

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு....

Last Updated : Jan 7, 2019, 04:27 PM IST
TN MP பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: HC title=

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு....

தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

பேருந்துகள் மீது கல்வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், குற்றம்சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார் பாலகிருஷ்ண ரெட்டி; மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும். மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தற்போது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. 

 

Trending News