மீனவர் தாக்குதல்: மன்னிப்பு கோரிய இந்திய கடலோர காவல் படையினர்

ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடலோர காவல் படையினர் மன்னிப்பு கோரியுள்ளனர். 

Last Updated : Nov 15, 2017, 06:13 PM IST
மீனவர் தாக்குதல்: மன்னிப்பு கோரிய இந்திய கடலோர காவல் படையினர் title=

ராமேசுவரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை நோக்கி நேற்று இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியது. அந்த தாக்குதலில் இரண்டு மீனவர்கள் காயம் அடைத்தார்கள். மேலும் படகை சுற்றி வளைத்த இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை தாக்கியோதொடு அல்லாமல், ஹிந்தியில் பேச சொல்லி துன்புறுத்தினர். கரைக்கு திரும்பிய மீனவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய கடலோர காவல் படையினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்திய கடலோர காவல்படைக்கும், மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது கடலோர காவல்படையினர் வருத்தம் தெரிவித்ததோடு, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது எனவும் உறுதி கூறினர்.

Trending News