சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியலில் பல்வேறு இணைப்பும், விலகலும் தினசரி வாடிக்கையாகிவிட்டது. பிரபல நடிகரும், நகைச்சுவை நடிகருமான செந்தில் பாஜகவில் இணைந்தார்.
மாநிலத் தலைவர் எல் முருகன் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் சி டி ரவி ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் செந்தில் இணைந்தார்.
சமீபத்திய ஆண்டுகளில், பல பிரபலமான நடிகர்களும், நடிகைகளும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர். கெளதமி, குஷ்பூ சுந்தர், ராதாரவி, நமீதா, கங்கை அமரன், எஸ்.வி.சேகர் என சினிமா துறையைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் செந்திலும் இணைந்துவிட்டார்.
Also Read | தமிழகத்தில் ஓலாவின் பிரம்மாண்டமான தொழிற்சாலை
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. தற்போது, பாஜகவுக்கு தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் யாருமே கிடையாது.
எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றால், தமிழகத்தின் அரசியல் களத்தில் வலுவான காலடியை பதிக்க முடியும் என்று பாஜக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
Also Read | Maha Shivratri 2021: தேதி, பூஜை நேரம், முக்கியத்துவம் மற்றும் பிற விவரங்களை தெரிந்துக் கொள்ளவும்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR