Chennai Latest News: சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காட்டு செல்லும் தடம் எண் 59 என்ற மாநகர பேருந்து ஒன்று அமைந்தகரை ஸ்கை வால்க் வணிக வளாகம் அருகே சென்றுள்ளது. அப்போது பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக எழுந்துள்ளார்.
அப்போது, திடீரென பேருந்தின் தளத்தில் உள்ள பலகை உடைந்து உள் வாங்கியது. இதனால் அந்த பெண் ஓட்டை வழியாக உள்ள விழுந்தார். கால் பகுதி முழுவதும் பேருந்தின் கீழே அந்தரத்தில் தொங்க கூச்சலிட, பேருந்து சிறிது தூரம் சென்று நிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் அதிர்ச்சி
அதிர்ச்சியடைந்த பயணிகள் ஓட்டைக்குள் சிக்கிக் கொண்ட பெண்ணை மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட மருத்துவ சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆத்திரமடைந்த பயணிகள் 'சேதமடைந்த நிலையில் இருந்த பகுதியை கவனிக்காமல் ஏன் பேருந்தை எடுத்து வந்தீர்கள்' என மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனரை கேள்வி எழுப்பினர்.
மேலும் படிக்க | பணிப்பெண் கொடுமை... திமுக எம்எல்ஏ மகன் வழக்கு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மாநகரப் பேருந்தில் பயணம் செய்து ஓட்டையில் விழுந்த பாதிக்கப்பட்ட பெண் சென்னை மின்ட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான தமீம் என்பவரின் மனைவி ஷாநா எனவும், இவர் என்.எஸ்.கே நகரில் ஒரு பிரின்டிங் பிரஸில் வேலை செய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
அண்ணாமலை கண்டனம்
மேலும், மாநகர போக்குவரத்து ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளிக்காமல் பேருந்தையும் அங்கிருந்து கொண்டு சென்றதால் அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் இருந்து, வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்தில், இருக்கையில் அமர்ந்திருந்த சகோதரி ஒருவர், இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து, ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து கீழே விழுந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தமிழகத்தில் திமுக அரசு நிர்வாகம்… pic.twitter.com/pRgmqyZzEY
— K.Annamalai (@annamalai_k) February 6, 2024
அதில்,"சென்னை திருவேற்காட்டில் இருந்து, வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்தில், இருக்கையில் அமர்ந்திருந்த சகோதரி ஒருவர், இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து, ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து கீழே விழுந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தமிழகத்தில் திமுக அரசு நிர்வாகம் என்ன நிலைமையில் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
வரிப்பணம் எங்கு செல்கிறது...?
சரியாகப் பராமரிக்கப்படாத பேருந்துகளால், மழைக் காலங்களில் பேருந்திற்குள் தண்ணீர் ஒழுகுவது, பழுதடைந்த இருக்கைகள் என, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் இன்று போக்குவரத்துத் துறை முற்றிலுமாகச் செயலிழந்து இருக்கிறது. போக்குவரத்துத் துறை மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழக அரசுத் துறைகளும் இதைப் போன்ற பரிதாப நிலையில்தான் இருக்கின்றன.
மக்களின் வரிப்பணம் முழுவதும் எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. போக்குவரத்துத் துறையில் என்னென்ன விதங்களில் ஊழல் செய்யலாம் என்று சிந்திக்கும் அமைச்சர், அரசுப் பேருந்துகளைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ