Tiruchendur Murugan Temple News : முருகப்பெருமானின் அறுபடை தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாதந்தோறும் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. செவ்வாய் தரிசனம், அமாவாசை பூஜை, பவுர்ணமி பூஜை மற்றும் இதர விஷேஷ நாட்களில் தமிழ் கடவுளான திருச்செந்தூர் முருகனை லட்சக்கணக்கான மக்கள் தரிசிக்கின்றனர். குறிப்பாக குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள், தொழில் கைகூட வேண்டும் என நினைப்பவர்கள், குடும்ப சிக்கல்கள், நிதி சிக்கல் இருப்பவர்கள் எல்லோருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் பரிகார தலமாக இருக்கிறது. கடலில் புனித நீராடிவிட்டு, அங்குள்ள கிணற்றில் நன்னீர் குளியலை போட்டுவிட்டு முருகனை சென்று தரிசிப்பது வழக்கம். சூரனை முருகப்பெருமான் வதம் செய்த தலம் என்பதாலும் அந்த கோவிலுக்கு சென்றால் மேலே சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
மேலும் படிக்க | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு எப்போது.. அப்டேட் இதோ
அதனாலேயே கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனையொட்டி தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவிலில் அடிப்படை கட்டமைப்புகள் எல்லாம் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. கழிவறை, குளியல் அறை, வாகனம் நிறுத்தும் இடங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவை வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக கட்டிய தங்கும் விடுதிகள், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனால் நீண்ட தூரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் இனி குடும்பத்துடன் திருச்செந்தூரில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியிலேயே தங்கலாம். இதற்கு திருப்பதியைப் போல் குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bed Rooms) கட்டப்பட்டுள்ளது. 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks) பக்தர்களின் வசதிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages), சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
முன்கூட்டியே அறை முன்பதிவு செய்ய வேண்டும் என விரும்பும் பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்துக்கு சென்று 04639 242271 மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதுதவிர இன்னும் இரண்டு தங்கும் விடுதிகளும் உள்ளன. அதில் அறை வாடகைகள் முறையே தலா 800 ரூபாய் மற்றும் 1500 ரூபாய் ஆகும். பக்தர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற அறைகளை தேர்வு செய்து தங்கிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு பின் டாஸ்மாக்கில் மிகப்பெரிய மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ