தருமபுரி அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவி திடீரென்று காணாமல் போனார். எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாவட்டம் முழுக்க தேடுதலை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, மாணவியின் புகைப்படத்தையும், சிசிடிவி காட்சிகளையும் வைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மாணவியை அடையாளம் கண்டுபிடித்தனர். சிறுமி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்த முபாரக் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து ஆசிரியர் முபாரக்கை பிடித்து விசாரித்தனர். ஆசை வார்த்தை கூறி மாணவியை இருசக்கர வாகனத்தில் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆங்கில ஆசிரியர் முபாரக்கை போக்ஸோ சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினிக்கு பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து மாணவியை கடத்தி சென்ற முபாரக் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி உத்தரவிட்டார். இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் உள்ள முபாரக்கை, மீண்டும் காவல் துறையினர் கைது செய்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR