இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

ADMK : உள்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கை  25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Written by - Chithira Rekha | Last Updated : Jul 7, 2022, 12:42 PM IST
  • இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு
  • தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • விளம்பரத்துக்காக தொடரப்பட்டதாகக் கண்டனம்
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி title=

அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே. கட்சியின் நிறுவனர் பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.5,000 கோடி செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 11-ம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

கட்சியில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையிலான பிரச்னை  சாதி ரீதியிலான பிரச்சனையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும் படிக்க | ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்

 அதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 28-ம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை என்றும், தனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கட்சியில் உறுப்பினராக இருக்கிறாரா? கூட்டம் நடக்கும் பகுதியில் வசிக்கிறாரா? என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், பொது நல வழக்கு என்ற பெயரில் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த ஒரு வாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறி, ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | OPS vs EPS : போருக்கு தயாரான ஓபிஎஸ் : சொந்த கட்சி ஊழல் விவரங்களையே வெளியிட போகிறார்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News