தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து மேலடுக்கு சுழற்சியாக இருக்கிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னைவானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னியா வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில்....
இந்திய பெருங்கடலை ஓட்டி உள்ள தென்கிழக்கு வங்கக் கடல் மத்திய பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மதியம் 5.30 மணி நிலவரப்படி(நேற்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் (12 ஆம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே, அது புயலாக மாறுமா? என்பது தான் தெரிய வரும். தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.