டீ, காபி குடிப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்! விலை அதிரடி உயர்வு!

கேஎஸ் மற்றும் பால் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் டீ, காபி விலைகள் உயர்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 4, 2022, 12:59 PM IST
  • தமிழகத்தில் டீ விலை உயர்வு..
  • ரூ. 10-ல் இருந்து 15 ஆகா உயர்வு.
  • இதனால் டீ பிரியர்கள் அதிர்ச்சி.
டீ, காபி குடிப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்! விலை அதிரடி உயர்வு!  title=

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி வருகின்றனர்.  அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான புதிய கேஸ் சிலிண்டரின் விலை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இந்த விலை உயர்வு சமீபத்தில் அமலுக்கும் வந்தது.

gas

மேலும் படிக்க | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலைகள்; அதிர்ச்சியில் மக்கள்

14.2 கிலோ எடையுள்ள வீட்டில் பயன்படுத்தக்கூடிய எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சமீபத்தில் நிறைவடைந்த 5 மாநில தேர்தலுக்கு பின்பு பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 50 பைசா முதல் 75 பைசா வரை உயர்ந்து தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 108.21 மற்றும் டீசல் லிட்டருக்கு 98 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  பைபாஸ் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல்கள் மற்றும் தேனீர் கடைகளில் உணவுகளின் விலை அதிகரிக்கும் அபாயம் இருந்தது. அந்த வகையில் தற்போது விலை உயர்வு தேனீர் கடையில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக ஒரு கிளாஸ் டீ விலை ரூ.10 முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி 15 ரூபாய் ஆக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.  முதற்கட்டமாக சென்னையில் ஒரு கிளாஸ் டீ விலை ரூ. 15 ஆக உயர்த்தப்படும் என்று தேனீர் கடை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதை நடைமுறை மதுரையிலும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tea

மேலும் படிக்க | சென்னையில் ஒரே நாளில் உணவு டெலிவரி செய்யும் 978 பேர் மீது வழக்கு! எதற்கு தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News