பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் வரவுள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போது இருந்தே பிளான் செய்து வருகின்றனர். அதே போல தமிழக அரசும் பொங்கல் பண்டிகையை ஒட்டிய திட்டங்களை செயல்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சர்க்கரை அட்டைதாரர்கள் உட்பட ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டை காரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1,000 வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, சக்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் இடம் பெற உள்ளன.
கடந்த சில வருடங்களாக பொங்கல் பரிசு தொகை நேரடியாக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் முறையாக மக்களுக்கு சென்று சேரவில்லை என்ற புகார்கள் வரவே, இந்த முறை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்துவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. அந்த வங்கி கணக்குகள் ஆக்டிவாக இருப்பதும், மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பதும் முக்கியம். எனவே இதனை சாதிப்படுத்துவது தொடர்பான திட்டங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்துவது சாத்தியம் இல்லாத பட்சத்தில் நேரடியாக ரேஷன் கடைகள் மூலம் பணம் விநியோகிக்கப்படும். பொதுவாக இதற்கான சிறப்பு டோக்கன்கள் வழங்கப்படும். இந்த முறை நேரடியாக பணம் கொடுக்கப்படும் பட்சத்தில் டோக்கன்கள் அடுத்த வாரம் 20ஆம் தேதி முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டு பொங்கல் பரிசில் மொத்தம் 21 பொருட்கள் இடம்பெற்றது. கடந்த ஆண்டு புளி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் 1000 ரூபாயும் வழங்கப்பட்டது. இந்த வருடமும் இதே நடைமுறை தொடரும் என்று கூறப்படுகிறது.
யாருக்கு ரூ. 1000 வழங்கப்படும்?
இந்த ஆண்டு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கும், சர்க்கரை ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஈரோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழக அரசிடம் இருந்து நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பரிசுக்காக சுமார் 238.92 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளனர். ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட நாளில் பரிசு பொருட்களை பெற்று கொள்ளலாம்.
முன்கூட்டியே கிடைக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை
தமிழகத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ. 1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் கொடுத்து வருகிறது. இந்த பணம் ஒவ்வொரு மாதமும் மாதமும் 15-ம் தேதி வங்கி கணக்கில் செலுப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால், அனேகமாக மாத தொடக்கத்திலோ அல்லது 10-ம் தேதிக்கு முன்பாகவோ இந்த பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ