நம் நாட்டின் ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்னும் ஊரை சேர்ந்த கல்பனா சாவ்லா நாசாவின் வின்வெளி வீரராக சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
கல்பனா சாவலா, மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணம் மேற்கொண்டதை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
2003 ஆம் ஆண்டு அவர் விண்வெளி பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக பல பரிசோதனைகள் செய்து பூமிக்கு திரும்பிய போதும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பூமிக்குள் நுழைவதற்கு சில நொடிகளுக்கு முன் வெடித்து சிதறிதால், கல்பனா சாவ்லா உட்பட அவருடன் பயணித்த 6 விண்வெளி வீரர்களும் மரணம் அடைந்தனர்.
ALSO READ | Tamil Nadu Govt: குழந்தைகளுக்கு திருமணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
இந்நிலையில், அவரை கவுரவிக்கும் வகையில் வீர தீர சாகசச் செயல்களுக்காக தகுதியுடைய பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கி கவுரவிக்கிறது. அதை அடுத்து, தகுதியுடைய பெண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது ஒவ்வொரு ஆண்டும்,சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழகத்தைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்கள்.
2021ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான சுயவிவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அரசுச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச்செயலகம், சென்னை – 600009 அவர்களுக்கு, 30/06/2021 க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருதுப் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முதல் அமல்: வாகனங்களில் வரும் மளிகைப் பொருட்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR