கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக தமிழகம், புதுவையில் சில பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Oct 6, 2018, 12:03 PM IST
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! title=

கனமழை காரணமாக தமிழகம், புதுவையில் சில பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

கடந்த இரண்டு தினங்களா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 7-ஆம் தேதி(நாளை) மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

இந்நிலையில் இன்று கனமழை காரணமாக தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேப்போல் திருவாரூர், நீலகிரி மாவட்டங்களிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியிலும்  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News