சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் (TN CM MK Stalin)பதவியேற்று இன்றோடு 100 நாட்கள் நிறைவடைகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையாக ஆட்சியை பிடித்தது. கடந்த மே மாதம் 7ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட முதல் நாளே ஐந்து முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார்.
அதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது.
அத்துடன் தேர்தலுக்கு முன்பாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மாவட்ட வாரியாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களுக்கு ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும் என ஸ்டாலின் அறிவித்த நிலையில் திமுக தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. அந்த வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற பெயரில் 17 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
ALSO READ | தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க. ஸ்டாலின்: தளபதி தலைவராகிறார்.
இந்நிலையில் இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ''100 நாட்கள் ஆட்சி குறித்து சபையில் இருக்கும் நீங்கள் எவ்வளவு பாராட்டினாலும் எனக்கு, அடுத்துவரும் காலம் பற்றிய நினைப்பே அதிகம் இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். கடந்த தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் கூட இப்போது தேர்தல் நடந்தால் திமுகவிற்கு வாக்களிப்பீர்கள்.
இங்கு படமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் கலைஞர் சொன்ன 'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' என்ற வாசகம் இன்னமும் என் மனதில் ஆழமாக இருக்கிறது. அந்தப் பெயரை காலம் முழுக்க காப்பாத்திட வேண்டும் என்ற எண்ணம்தான் என்னிடம் இருக்கிறது எனக் கூறினார். மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் எண்ணற்ற சாதனைகளை படைத்திருப்பதாகவும், வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ALSO READ | தவறு செய்தால் பதவி நீக்கம்: தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR