நாளை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 5, 2019, 01:54 PM IST
நாளை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் title=

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி நிறைவடைந்தது. ஆன்லைனில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் முறையாக விண்ணப்பம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

59 ஆயிரத்து 756 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நீட் தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஆனால் க டந்த 2 ஆம் தேதியே பட்டியலை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வரை பட்டியல் வெளியாகவில்லை.

இந்தநிலையில், எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்களுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிகப்பட்டு உள்ளது. 9 ஆம் தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது

Trending News