"பெரியார்" சிலையை சேதப்படுத்திய சமூக விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

"பெரியார்" சிலையை சேதப்படுத்திய சமூக விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தலைவர்கள் கோரிக்கை.

Last Updated : Jan 24, 2020, 07:45 PM IST
"பெரியார்" சிலையை சேதப்படுத்திய சமூக விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் title=

சென்னை: பகுத்தறிவாளர் இ.வி.ராமசாமி "பெரியார்" (Periyar) சிலை உடைந்த நிலையில் தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) காலை தெரிய வந்தது. மாநிலத்தின் பல தலைவர்கள் இதைக் கண்டித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உத்திராமருக்கு அருகிலுள்ள காளியப்பேட்டையில் பதற்றம் நிலவியது. பெரியார் சிலையின் முகமும் கையும் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை சிலை சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பெரியாரின் சிலை உடைப்பு காழ்ப்புணர்ச்சியில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். 

கடந்த வாரம் திராவிடத் தலைவரைப் பற்றி, ஒரு நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதைத் தொடர்ந்து "பெரியார்" குறித்து மீண்டும் தமிழகத்தில் விவாதம் செய்யப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

ஜனவரி 14 ஆம் தேதி தமிழ் பத்திரிகை "துக்ளக்" ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், "பெரியார் 1971 இல் சேலத்தில் ஒரு பேரணியை நடத்தினார், இது ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மற்றும் சீதாவின் நிர்வாண படங்கள் இடம் பெற்றிருந்தது என்றும், கடவுள் ராமரை செருப்பால் அடித்ததாக கூறினார். அதை யாரும் பத்திரிகையில் போடவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார் எனக் கூறியிருந்தார். ரஜினிகாந்தின் கருத்துக்கள் பெரியார் சார்பு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கோபமடைந்தன. மேலும் ரஜினிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டது. 

"பெரியார் சிலை" உடைப்பு நாசவேலை சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ் அதிருப்தி தெரிவித்ததோடு, பகுத்தறிவாளர் தலைவரின் சிலைக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த சம்பவத்தை கண்டித்த திமுக தலைவர் ஸ்டாலின், வெட்கக்கேடானது மற்றும் வருந்தத்தக்கது என்று கூறினார். இந்த விவகாரத்தில் மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 

பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ் இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்ததோடு அது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் என்றார். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். 

தந்தை பெரியார் மற்றும் மாநிலத்தின் பிற தலைவர்களின் சிலைகளை உடைக்கும் சமூக விரோத சக்திகளுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று போலீஸ் ஜெனரல் எல்.கே. திரிபாதி எச்சரித்துள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News