அறிஞர் அண்ணா பிறந்தநாள்: 700 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை அரசாணை வெளியீடு-தமிழக அரசு

அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் குறைத்து முன் விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை  வெளியிட்டது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2021, 12:16 PM IST
  • அறிஞர் அண்ணாவின் 113ம் பிறந்தநாள்
  • 700 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை
  • அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
அறிஞர் அண்ணா பிறந்தநாள்: 700 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை அரசாணை வெளியீடு-தமிழக அரசு title=

சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு (செப்டம்பர் 15-ஆம் தேதி) தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1967ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அறிஞர் அண்ணா,  காஞ்சிபுரத்தில் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி பிறந்தார். தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சரான அண்ணாதுரை (Former Chief Minister of Tamil Nadu, Aringar Anna), அறிஞர் அண்ணா என்றே அனைவராலும் அறியப்பட்டார். 

இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த திராவிடக்கட்சியின் தலைவர் அண்ணா. காங்கிரஸ் அல்லாத பிற கட்சி மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் அண்ணா.  

பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை, நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்வதாக, தமிழகத்தில் ஆளும் திமுக  அரசு வெளியிட்டிருந்தது.

TAMILNADU

அந்த அறிவிப்புக்கு சட்ட வடிவம் கொடுத்து, நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே, நீண்ட காலமாக சிறையில் இருக்கும் 700 ஆயுட் கைதிகள், தங்கள் தண்டனைக் காலத்திற்கு முன்னதாகவே முன்விடுதலை செய்யப்படும் நடைமுறைகள் இனி தொடங்கும்.

இதுதொடர்பான அரசாணை (Government order by Tamil Nadu) வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, நவீன தமிழ்நாட்டின் முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் தொடர்பான மாநில அரசின் ஆணை, அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. 

ALSO READ | அண்ணா! எங்கள் அண்ணா!!  யார் அண்ணா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News