அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசுடன் இன்னும் என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

மத்திய அரசு அளிக்கும் புயல் நிவாரண நிதியைப் பொறுத்து மக்களுக்கு கிடைக்கப்போகும் நிவாரண நிதியின் அளவு இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2020, 01:43 PM IST
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை வழங்க தயாராகிறது அரசு.
  • கொரோனா நிவாரண நிதியும் புயல் நிவாரண நிதியும் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
  • இது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது.
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசுடன் இன்னும் என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா? title=

உலகம் முழுவதும் உள்ள மக்களை கொரோனா தொற்றுநோய் பாடாய் படுத்தி வருகிறது. மக்கள் வீடுகளுக்குள் அடைந்திருந்து கடந்த சில மாதங்களாகத் தான் மெதுவாக ஒரு புதிய இயல்புக்கு திரும்பி வருகிறார்கள். பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மக்களின் நிதி நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரை, கொரோனா தொற்று ஒரு புறம், அடுத்தடுத்து வந்து ஆட்டம் காட்டிய புயல்கள் ஒரு புறம் என மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசனையில் உள்ள ஒரு விஷயம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை (Pongal Festival) வரவுள்ளது. தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை அளிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனுடன் சேர்த்து புயல் நிவாரண நிதியும், பொங்கல் பரிசும் வழங்கப்படும் என நம்பப்படுகிறது. நிவர் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு (Tamil Nadu Government), மத்திய அரசிடம் 3 ஆயிரத்து 762 கோடி ரூபாய் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Ration Card Application: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரேஷன் கார்டை பெறுவது எப்படி

இந்த நிதியை பயன்படுத்தி புயல் நிவாரண நிதியையும் பொங்கல் பரிசையும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசு (Central Government) அளிக்கும் புயல் நிவாரண நிதியைப் பொறுத்து மக்களுக்கு கிடைக்கப்போகும் நிவாரண நிதியின் அளவு இருக்கும். எனினும், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசும் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பது உறுதி அன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்ற வருடம், தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது. இதில், ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அளிக்கப்பட்டன. இந்தத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு மத்திய அரசிடமிருந்து வரும் புயல் நிவாரண நிதியின் அடிப்படையில், கொரோனா (Corona) நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி மற்றும் பொங்கல் பரிசை தமிழக அரசு ஒன்றாக அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ALSO READ: உஷார்: நீங்கள் இதை செய்யாவிட்டால், உங்கள் ration card ரத்து செய்யப்படலாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News