சென்னை: தற்போது தமிழகத்தில் Unlock 4 கட்டத்தில் பல தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வெளியே வரத் தொடங்கியுள்ளனர். மேலும் வரும் 7 ஆம் தேதி முதல் பேருந்து (Bus Services) மற்றும் ரயில் (Train) சேவை மீண்டும் மாநிலத்தில் தொடங்க உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கூட்டம் கூடலாம் அல்லது பொதுமக்கள் தங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு (TN Govt) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், பொது இடங்களில் எச்சில் (Spitting) துப்பினால் ரூ. 500 மற்றும் முகக்கவசம் (Face Mask) அணியாமல் வெளியே சுற்றினால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகள் உடனடியாக மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது.
பொதுச் சுகாதாரச் சட்டத்தில் தமிழக அரசு சில திருத்தங்களை மேற்கொண்டது. அதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (Banwarilal Purohit) ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து தான் இந்த சட்டம் மாநிலத்தில் அமல் செய்யப்பட்டது.
ALSO READ |
பொதுவெளியில் எச்சில் துப்பினால் ₹500 வரை அபராதம்; திருப்பூர் ஆட்சியர் அதிரடி...
பான் மசாலா சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை.. பொது இடத்தில் துப்பினால் 10 ஆயிரம் அபராதம்
தமிழகத்தில் மேலும் புதிதாக 5,976 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி 51,633 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல நேற்று 79 இறப்புகளுடன், மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கையை 7,687 ஆக உயர்ந்துள்ளது.