Coimbatore Corporation: கோவை மாவட்ட தேர்தல் முடிவுகள் - திமுக ஆதிக்கம்!

Coimbatore Corporation Election Results 2022: கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றன. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Feb 22, 2022, 03:20 PM IST
Coimbatore Corporation: கோவை மாவட்ட தேர்தல் முடிவுகள் - திமுக ஆதிக்கம்! title=

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் திமுக முன்னிலை பெற்று வருகிறது. கடந்த 19 ஆம் தேதி  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது.

அனேக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தாலும், கோயம்புத்தூரை பொறுத்த வரை அது அதிமுகவின் கோட்டையாகவே உள்ளது. அதேநேரத்தில் அங்கு பாஜகவுக்கும் செல்வாக்கு இருக்கிறது. அதிமுக, பாஜக-வை மீறி திமுக வெற்றி பெறுமா? அல்லது நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலை போல அதிமுக கை ஓங்குமா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் இடையே இருந்தது.

மேலும் படிக்க: சென்னை மேயர் பதவி யாருக்கு?

கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றன. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கோவை மாவட்டம் நிலவரம்: 

நகராட்சி : 7 (198 வார்டுகள்)

திமுக : 159
காங்கிரஸ் : 6
மதிமுக : 1
சிபிஎம் : 1
அதிமுக : 23
பாஜக : 1
சுயேட்சை : 7

மேலும் படிக்க: சுயேச்சைகளின் கையில் கமுதி பேரூராட்சி 15ல் 14 வார்டுகளில் வெற்றி

பேரூராட்சி : 33 (504 வார்டுகள்)

திமுக : 378
காங்கிரஸ் : 12
மதிமுக : 1
சிபிஎம் : 9
சிபிஐ : 1
அதிமுக : 71
பாஜக : 5
சுயேட்சை : 27

மேலும் படிக்க: Tamil Nadu Urban Election Results 2022 LIVE: தேர்தலில் வெற்றி பயணத்தை நோக்கி திமுக

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News