ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22 ஆம் தேதி பொதுமக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பலர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் எஸ்.பி, துணை வட்டாட்சியர்கள் உட்பட 11 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தனர். இதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு பற்றிய முழு விசாரணையை சி.பி.ஐ நடத்த வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டிற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.இ.ஓ ராம்நாத் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தேங்கிக்கிடக்கின்றன. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், வரி செலுத்துதல் உள்ளிட்ட வேலைகள் முடிக்கப்பட வேண்டும் என கூறியதன் அடிப்படையில், நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள மட்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை கூடம் நடத்தினார்.
உத்தரவு மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை; முதல்வர் பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு....!
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரிப்பிட்டுள்ளதாவது...!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்தலைமையில் இன்று (12.8.2018) தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை தமிழ்நாடு அரசு மூடியதை எதிர்த்து,அந்நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்துள்ள வழக்கில், 9.8.2018 அன்றுவழங்கிய உத்தரவுகளின் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன எடுக்க வேண்டுமென்றுஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம்,மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன், மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி, மாண்புமிகுநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும்சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு.சி.வி. சண்முகம், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு கே.பி.அன்பழகன், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு.எம்.சி. சம்பத், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. கே.சி. கருப்பணன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.கு. ஞானதேசிகன், இ.ஆ.ப., சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திரு.முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., சட்டத்துறை செயலாளர் திரு.சு.ச. பூவலிங்கம், அரசு தலைமை வழக்கறிஞர் திரு. விஜய் நாராயண், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் திரு.டி. சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.