நாமக்கல்: சிபிஎஸ்இ +2 தேர்வில் இந்திய அளவில் 3-ம் இடமும், மாநில அளவில் முதல் இடம் பிடித்து ராசிபுரம் மாணவி யோகேஸ்வரி சாதனை. சிறப்பு பயிற்சி வகுப்புகளை தவிர்த்து வீட்டில் நன்றாக படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவராக உள்ளதாக மாணவி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் சிபிஎஸ்சி +2 மற்றும் 10 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெற்றி விகாஸ் தனியார் பள்ளியை சேர்ந்த யோகேஸ்வரி மாணவி +2 தேர்வு 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 3-ம் இடமும், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கணிதம் இயற்பியல் வேதியல் உள்ளிட்ட மூன்று பாடங்களில் 100 மதிப்பெண்களும் ஆங்கிலம் 97, உயிரியல் 99 என 496 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்திய அளவில் மூன்றாம் இடமும் மாநில அளவில் முதலிடமும் பெற்ற மாணவிக்கு பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
தனது சாதனை குறித்து பேசிய மாணவி யோகேஸ்வரி, "எங்கள் பள்ளி ஆசிரியர்கள் தங்களிடம் நண்பனாக பழகுவதன் மூலம் அனைத்து விதமான சந்தேகங்களை எளிய முறையில் விளக்குவதாகவும், பல்வேறு மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு செல்கின்றன. இதுபோல பயிற்சி வகுப்புகளின் மூலம் எவ்வித பயன் இல்லை என்றும், மாணவ மாணவிகள் பயிற்சி வகுப்புகளை தவிர்த்து வீட்டில் நன்றாக படித்தால் இது போல அனைவரும் முதலிடம் பெற்று தமிழகத்தை கல்வி மாநிலமாக மாற்றலாம். மேலும் நீட் தேர்வு எழுதியுள்ளேன் அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதே எனது கனவு எனக் கூறினார்.
மேலும் படிக்க: CBSE 2023: 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் தமிழகம் 98.97% தேர்ச்சி பெற்றுள்ளது. இதன் முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் வெளியிடப்பட்டன. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வாரியம் முன்னதாகவே அறிவித்தது.
மாணவி யோகேஸ்வரி எடுத்த மதிப்பெண்கள்:
ஆங்கிலம் - 97
கணிதம் - 100
இயற்பியல் - 100
வேதியியல் - 100
உயிரியியல் - 99
மொத்தம் 496
மேலும் படிக்க: CBSE 10TH RESULT: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 வெளியானது
மேலும் படிக்க: கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு: உயர்க்கல்வித்துறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ