கோவை மாவட்டம், கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம் பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு இந்த மையத்தில் கோவை, சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஸ்வேதா நீட் தேர்வு பயிற்சிக்காகச் சேர்ந்திருக்கிறார்.
அப்போது பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்வேதாவிற்கும் அதே மையத்தில் படித்து வந்த மாணவருக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் மாணவியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவர இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜனவரி மாதம் பயிற்சியை நிறுத்திவிட்டு அந்த மாணவர் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் ஸ்வேதா உடல் நிலை சரியில்லாமலும், பயிற்சி வகுப்புக்கு செல்லாமலும் அறையிலேயே தங்கி இருந்ததாகத் தெரிகிறது. உடன் தங்கியுள்ள மாணவிகள் பயிற்சி வகுப்புகளை முடித்து விட்டு திரும்பிய போது அறை உட் பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது. அப்போது ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த மாணவிகள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார், ஸ்வேதா. மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த விடுதி ஊழியர்கள் அறையின் கதவை உடைத்த, ஸ்வேதாவை மீட்டுள்ளனர். உடனே குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெடவெடத்துப் போனார்கள். ஆம், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | மனைவியுடன் தகாத உறவு.. நண்பனை வெட்டிப் புதைத்த கொடூரம்..!
முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பெற்றோர் கண்டித்ததால் ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR